மலேசியா ஸ்ரீ பழநிமலை முருகன் கோயிலில் ஜனவரி 28 ம் தேதி தைப்பூசத் திருவிழா வெகு விமர்சையாக் கொண்டாடப்பட்டது. தைப்பூசத்தை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு மகா அபிஷேகம், சங்காபிஷேகம் ஆகியன நடத்தப்பட்டன. காலை 9.30 மணிக்கு துவங்கி, தொடர்ந்து 2 மணி நேரம் மகா அபிஷேகம் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளதால், பக்தர்கள் யாரும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும் பக்தர்கள் பழநிமலை முருகனை தரிசனம் செய்வதற்காக, ஆலய நிகழ்வுகள் அனைத்தும் முகநூல் பக்கத்தில் நேரலை செய்யப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.