மலேசியாவின் பெனாங் பகுதி நகரத்தார் தண்டாயுதபாணி ஆலயத்தில் ஜனவரி 26 ம் தேதி துவங்கி தைப்பூச திருவிழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடத்தப்பட்டது. ஜனவரி 27 ம் தேதி வெள்ளி ரத ஊர்வலம் நடைபெற்றது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வழக்கமாக நடைபெறும் மேளதாளங்கள் ஏதும் இன்றி அமைதியான முறையில் தைப்பூச விழா நடைபெற்றது. வெள்ளி தரத்துடன் 10 பேர் மட்டுமே செல்ல வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி இருந்தனர். கோயிலிலோ அல்லது வெள்ளி ரத ஊர்வலத்தின் போதோ பக்தர்கள் யாரும் கூட்டம் கூட வேண்டாம் எனவும், வீட்டின் அருகில் இருந்தே பக்தர்கள் முருகப் பெருமானை தரிசிக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டது.ஜனவரி 30 ம் தேதி வெள்ளித்தேர் கோயில் வீடு திரும்பும் வைபவமும் இதே கட்டுப்பாடுடன் நடைபெற்றது. 50 நிமிடங்களில் வெள்ளித்தேர் கோயில் வீடு திரும்பும் வைபவம் நடைபெற்றது. உற்சவ மூர்த்தி கோயிலுக்குள் கொண்டு செல்லும் முன் 5 நிமிட சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. தைப்பூச நிகழ்வுகள் அனைத்தும் ஆலய முகநூல் பக்கத்தில் நேரலை செய்யப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.