லேகோஸ் : நைஜீரியாவின் லேகோஸ் பகுதியில் கடந்த 12ம் தேதி, தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்று திருவிளக்கு பூஜை மிகவும் உற்சாகமாக நடைபெற்றது. ஒவ்வொரு வருடமும் போல் தை வெள்ளி அன்று சுமங்கலிகள் ஒன்று கூடி விளக்கு பூஜை செய்து, ஸ்தோத்திரங்கள் பாராயணம் செய்து, அம்பாளின் துதிகள் பாடி வழிபாடு செய்தனர். ஆனால் இந்த ஆண்டு செயலி மூலம் அவர்கள் வீட்டிலிருந்தபடியே வழிபாடு நடத்தினர். லோகா சமஸ்தா சுகினோ பவந்து என்ற ப்ரார்த்தனையை ப்ரதானமாக வைத்து வழிபாடு நடைபெற்றது.
– நமது செய்தியாளர் ஶ்ரீவித்யா ஆனந்தன்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.