சிங்கப்பூரில் சிறப்பு பட்டி மன்றம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் சிறப்பு பட்டி மன்றம்

பிப்ரவரி 22,2021 

Comments

சிங்கப்பூர் ஜலான் புசார் சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழு – முஸ்லிம் லீக் ( சிங்கப்பூர் ) சமூக நல்லிணக்க சேவை அமைப்பின் மொழி மற்றும் இலக்கியப் பிரிவின் இளம் பிறை இலக்கிய வட்டம் ஏற்பாட்டில் கடந்த ஜீன் 2019 முதல் மாதந்தோறும் பேசும் கலை வளர்ப்போம் மன்றம் – மாணவர்கள் – குடியிருப்பாளர்கள் பங்குபெறும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. மாணவர்களிடையே பேச்சு மற்றும் பாடல் திறமைகளை ஊக்கப்படுத்தி நாளைய தலைவர்களை உருவாக்க உதவுவதும் தமிழ் மொழி என்றென்றும் நம் நாவில் ஒலித்துக் கொண்டே இருக்கவுமான முயற்சி நடைபெற்று வருகிறது .இந்த அமைப்பிற்கு மூத்த சமூக அடித்தளத் தலைவர் புதிய நிலா மு.ஜஹாங்கீர் தலைவராகச் செயல்பட்டு வருகிறார்.
இளம்பிறை இலக்கிய வட்டத்தின் பேசும் கலை வளர்ப்போம் 18 ஆவது சிறப்பு நிகழ்ச்சி உலகத்தாய் மொழி தினமான பிப்ரவரி 21 ஞாயிறு சிறப்புப் பட்டி மன்றமாக மெய்நிகர் நிகழ்வாக நடைபெற்றது. “ கோவிட் 19 சமுதாயத்தில் எழுச்சியையே ஏற்படுத்துகிறது – தளர்ச்சியையே தருகிறது “ என்பது பட்டிமன்றத்தின் தலைப்பு. எழுச்சியையே ஏற்படுத்துகிறது என்ற அணி திருவாட்டி ஸ்வர்ணலதா ஆவடையப்பன் தலைமையில் திருவாட்டி பாகிரா ஷாஹீல் மற்றும் செல்வன் அர்ஷத் துணை நிற்க வாதிட்டது. தளர்ச்சியையே தருகிறது என்ற அணி கவிஞர் பரீஜ் முகம்மது தலைமையில் கார்த்திக் சிதம்பரம் மற்றும் செல்வி அருணா கந்தசாமி துணையுடன் எதிர்வாதிட்டது. மூத்த பத்திரிகையாளர் வெ.புருஷோத்தமன் நடுவராகச் செயல்பட்டார். இரு அணிகளும் தத்தம் அணிக்கு வலு சேர்க்கப் பல தகவல்களைத் தந்து அசத்தினர். பேசியும் பாடியும் கலகலப்பை ஏற்படுத்தினர். இரு தரப்பு வாதங்களையும் உன்னிப்பாகக் கவணித்து ஆய்ந்த நடுவர் கோவிட் 19 சமுதாயத்தில் எழுச்சியையே ஏற்படுத்தியிருக்கிறது எனத் தீர்ப்பளித்தார். யூ டியூப் மற்றும் முகநூல்வழி நிகழ்வு நேரலையாக ஒலி – ஒளி பரப்பப்பட்டது.
முன்னதாக அமைப்பின் தலைவர் புதிய நிலா ஜஹாங்கீர் தலைமை உரை ஆற்றினார். மாணவர் ஸ்ரீவிகாஷ் பழனி திரைப்படத்தில் கவியரசு கண்ணதாசன் இயற்றிய “ ஏரோடும் “ பாடலைப் பாடி அனைவரையும் தன்வசப்படுத்தினார். ஜப்பானில் நடைபெற்ற ஹைக்கூ கவிதைப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அஷ்ரப் தம் கவிதையை வாசித்துக் கரவொலி பெற்றார். ஏற்பாட்டாளர் முகம்மது பிலால் வரவேற்புரை ஆற்றி நிகழ்வினையும் சுவைபட நெறிப்படுத்தினார். அஷ்ரப் நன்றி நவில பட்டி மன்றம் நிறைவு கண்டது.- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us