வெகு சிலர் மட்டுமே திருக்குறளுக்கு மிக அரிதாக இசை அமைக்கும் முயற்சியை மேற்கொண்டனர். ஆனால் சித்திரவீணா என்.ரவிக்கிரண் புது முயற்சியாக திருக்குறள் வரிகளுக்கு இசை அமைத்ததுடன் முந்தைய சாதனையையும் முறியடித்துள்ளார்.
16 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் 1330 திருக்குறளுக்கு இசை அமைத்து, புதிய உலக சாதனை படைத்துள்ளார் ரவிக்கிரண். சென்னை தரமணியில் உள்ள சர்வதேச தமிழ் ஆய்வு மையத்தில் ஜனவரி 12 ம் தேதி இந்த சாதனைக்கான பணியை அவர் துவக்கினார்.
இந்த சாதனை நிகழ்வினை காண அறிஞர்கள், இசை கலைஞர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. மெஹர்மனி இசை நிகழ்ச்சியில் விருது பெற்ற ரவிக்கிரண், திருக்குறளை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் முயற்சியாக இதனை செய்துள்ளார்.
இது பற்றி ரவிக்கிரண் கூறுகையில், கர்நாடகம், நவீனம், திரைப்படங்கள் என பலவற்றில் திருக்குறள் வரிகளுக்கு இசை அமைத்துள்ளனர். வள்ளுவரின் வரிகளுக்கு இசை அமைப்பது கடினமாகவே பார்க்கப்பட்டது. இதனால் குரலை முழுவதுமாக இசை வடிவில் கொண்டு வர முடிவு செய்தேன்.
காலத்தால் அழியாத, அனைத்து காலத்திற்கும் பொருந்தக் கூடிய வரிகளை இசை கலைஞர்கள், இசை நிகழ்ச்சிகளில் அடிக்கடி பயன்படுத்தச் செய்ய வேண்டும் என்பதே எனது முதல் நோக்கமாக இருந்தது. பரநாட்டியம், குச்சிப்புடி போன்ற பாரம்பரிய நடனத்திலும் திருக்குறள் பயன்படுத்தப்பட வேண்டும் என்றார்.
சவாலாக இருக்கும் விஷயங்களில் சாதனை படைப்பது இவருக்கு புதிதல்ல. உலக புகழ்பெற்ற இசை ஜாம்பவான்களான பிடி ரவி ஷங்கர், எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோரால் அடையாளம் காணப்பட்டு, 2 வயதிலேயே 325 ராகங்கள் மற்றும் 175 தாளங்களை மெட்ராஸ் இசை அகாடமியில் அரங்கேற்றி அனைவரையும் வியப்படைய செய்தவர்.
5 வயது முதல் இசை கச்சேரிகளை நிகழ்த்தி வரும் இவர், 11 வயதில் சித்திரவீணா கச்சேரிகளையும் நிகழ்த்தி வருகிறார். அவர் தனது 18 வது வயதில் இடைவிடாது 24 மணி நேரம் உணவு, தண்ணீர் இன்றி இசை நிகழ்ச்சி நடத்தினார்.
சமீபத்தில் 25 கலைஞர்களுடன் ரவிக்கிரண் இணைந்து நடத்திய திருக்குறள் இசைக் கச்சேரியை இணைய வழியாக ஆயிரக்கணக்கானவர்கள் கண்டு ரசித்தனர்.
https://www.facebook.com/watch/?v=170437574579251
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.