பஹ்ரைனில் ராசாத்தி தமிழ் இசை அஞ்சலி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பஹ்ரைனில் ராசாத்தி தமிழ் இசை அஞ்சலி

பிப்ரவரி 24,2021 

Comments

  பஹ்ரைன் மனாமா: பஹ்ரைன் கான்வேஸ் சினிமா மீடியா சார்பாக பஹ்ரைனிலேயே படமாக்கப்பட்ட ராசாத்தி தமிழ் இசை அஞ்சலி தொகுப்பு சென்னையில் வெளியிடப்பட்டது. மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் இயக்குனர் ராஜேஸ்கண்ணா வெளியிட, தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரும் தயாரிப்பாளரும் சண்டைப்பயிற்சி இயக்குனருமான ஜாகுவார் தங்கம் பெற்றுக்கொண்டார்.பஹ்ரைன் வாழ் இந்தியர்களான ரேஞ்சிஷ் இயக்கத்தில் உன்னிகிருஷ்ணன் இசையமைத்து பாடியிருந்தார். பாபு பாண்டியனின் கலையில் கார்த்திக் மற்றும் இஷிகா ஆகியோரை அஜித் மிக நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்திருந்தார். இயக்குனர் ரேஞ்சிஷ் கூறும்போது '1990-களின் தமிழக கிராமப்புறத்தை இந்த அரபு நாடான பஹ்ரைனில் படமாக்கி இருக்கிறோம், இந்த புதிய முயற்சி சவாலாக இருந்தது' என்று கூறினார்.தமிழகத்தை சேர்ந்த பல்வேறு திரை பிரபலங்கள் ஆதரவும் வாழ்த்துக்களும் தெரிவித்திருந்த நிலையில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.- நமது செய்தியாளர் பெ.கார்த்திகேயன்



Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us