குவைத்தின் 60வது ஆண்டு தேசிய தின கொண்டாட்டம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

குவைத்தின் 60வது ஆண்டு தேசிய தின கொண்டாட்டம்

பிப்ரவரி 25,2021 

Comments

நாட்டின் அமைதி, ஸ்திரத்தன்மையை காக்கவும் - அனைத்து துறைகளும் அபிவிருத்தியாகி வளர்ச்சியில் சிகரத்தை எட்டவும்..... குவைத் தனது 60வது தேசிய தின கொண்டாட்டத்தை மறைந்த H.H அமீர் சேக் நவாஃப் அல்-அஹமது அல்-ஜாபர் அல்-சபா மற்றும் H.H the Crown Prince சேக் மிசால் அல்-அஹமது அல்-ஜாபர் அல்-சபா அவர்கள் தலைமையில் பிப்-25ல் கொண்டாடி வருகிறது.

பிப் 26ல் Liberation Day கொண்டாடப்படும்; சதாமின் ஆக்கிரமிப்பை வீழ்த்தி சுதந்திர தேசமாக மீண்டெழுந்ததை நினைவுகூர்ந்து! சதாமின் ஆக்கிரமிப்பில் எள்ளளவும் சேதாராமின்றி தப்பித்த குவைத்தின் மிக உயரிய இரண்டாவது கோபுரமான தொலைதொடர்பு கோபுரத்தை - சுதந்திர கோபுரம்(Liberation Tower) என அறிவித்தது குவைத் அரசு. இன்றளவும் உயரமாய் - கம்பீரமாய் - இரவில் வண்ணமயமாய் காண்போரை வியக்கவைத்து கொண்டிருக்கிறது.

இந்தியாவின் சுதந்திர தினம் - குடியரசு தினத்தை ஒரு சேர கொண்டாடினால் எப்படி இருக்கும் என்று எண்ணி பாருங்கள்.... அப்படிதான் குவைத்தில் இவர்களின் National Day & Liberation Day கெண்டாட்டங்கள்!!! அடுத்தடுத்த நாளில்! நம்ம ஊர் பொங்கல் போல் ஒரு வாரம் - நாடே கொண்டாடி மகிழும்.... ஏன் என்றால்? குவைத் முதன்முதலில் 17ம் நூற்றாண்டில் ஒரு சிறிய மீன்பிடி கிராமம் - 18ம் நூற்றாண்டின் இறுதியில் ஒரு முக்கிய வர்த்தக மையமாகவும் & படகு கட்டும் மையமாகவும் மாறியது.
எண்ணெய் கண்டுபிடிப்புக்கு பின் குவைத் வரலாற்றில் தலைகீழ் மாற்றம்! உலகில் மின்தடையற்ற நாடு - திரும்பிய பக்கமெல்லாம் வானூயுர்ந்த கட்டிடங்கள் - 2மணி நேரத்தில் நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் வலம் வர 8வழி, 10 வழிகொண்ட பளபளக்கும் சாலைகள் - உலகிலேயே உயர்ந்த மதிப்புகொண்ட பணம் (1KD = ₹238) - களவு கற்பழிப்புக்கு தயவு தாட்சணை காட்டாத சட்டம் -
உலகில் கணிசமாக தொட்டணைந்தூறும் எண்ணெய் கிணறுகள் ! பாலையில் விவாசாய சோலை - அழகிய கடற்கரைகள் - உடற்பயிற்சிக்கு நடக்க.... குடும்பத்தோடு மகிழ ஆங்காங்கே அழகிய பூங்காக்கள்!!! என காண்போரை சொக்க வைக்கும் தேசமாய் மாறி நிற்கிறது.
வீட்டிற்கொரு ஆடிகாரோ - BMWஎன ஏதேனும் ஒர் உயர்ந்த கார் கட்டாயம் இருக்கும்! விலையுயர்ந்த PRADO கார் லாம் குவைத்தின் வீதிகளில் நம்ம ஊர் மாருதி Alto போல் உலா வரும் என்றால் எண்ணி கொள்ளுங்கள். விலையுரந்த கார்களும் - மொபைல்களும் இந்நாட்டு குடிமக்களுக்கு தண்ணீ பட்ட பாடு!
ஜூன் 19, 1961 அன்று, குவைத் பிரிட்டிஷ் பாதுகாவலரின் முடிவிலிருந்து சுதந்திரமாகி, ஷேக் அப்துல்லா அல்-சலீம் அல்-சபா இந்நாட்டின் அமீராக அரசணை ஏறினார். ஆரம்பத்தில் குவைத்தில் தேசிய தினம் என்பது சுதந்திர தேதியை(ஜூன் 19, 1961) குறிக்கும்.
அன்றிலிருந்து பிப் 25 &26ல் தேசிய தினத்திம் மற்றும் சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக , நாடு முழுவதும் வீடுகள் தொடங்கி வீதிகள்தோறும்.... LED விளக்குகள் -தேசியக் கொடி - இன்னும் பிற தேசபக்த சின்னங்களால் அலங்கரிக்கபட்டு அமர்க்களம் படுத்தபடும்! கிட்டதட்ட பிப்ரவரி மாதம் முழுவதுமே விழாக்கோலமாகதான் இருக்கும் - எங்கு நோக்கினும்!!!!
நம்ம ஊர் மஞ்ச தண்ணீர் திருவிழா போல்.... இங்கு வீதிகள் தோறும் சின்ன சின்ன வாண்டுகள் கண்ணில் பட்டவர்கள் மேலெல்லாம் AK47 பொன்ற சைஸீலுள்ள தண்ணீர் துப்பாக்கிகளில் வண்ண தண்ணீரை பீய்ச்சி அடிச்சும் - தண்ணீர் நிரப்பிய சிறிய பாக்கெட்டுகளை குண்டாக நம் மீது விட்டெறிந்தும்.... உண்டு --இலலைனு ஒரு வழி செய்துவிடுவார்கள்.
பெரியவர்கள் பாரம்பரிய உடையணிந்து - குடும்பம் குடும்பமாய் சந்தித்து National Day வாழ்த்துக்கள் சொல்லி நாட்டை போற்றி கொண்டாடுவார்கள்... பீச் to பெரிய பெரிய மால்கள் வரை மக்கள் கூட்டதாலும் - கொண்டாடதாலும் நிரம்பி வழியும்! நம்ம ஊர் தீபாவாளி போல்!!!
பிப் 26 கொண்டாட்டத்தில்.... இரவில் குவைத்தின சுதந்திர தின சின்னமான மிக உயரிய, 2019ல் இதே நாளில் 4,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் 2019 மீட்டர் நீளமுள்ள குவைத் கொடியுடன் அணிவகுத்துச் சென்று கின்னஸ் உலக சாதனை படைத்தனர்.
கடந்த வருடம் Google நிறுவனம தனது Google Search Engineல் குவைத்தின் தேசிய கொடியை பறக்கவிட்டு தனது வாழ்த்தை கூறியது. கொரோனா பாதிப்பை குறைக்க கடந்த வருடம் தொடங்கிய கடும் கட்டுபாடுகள் - இந்த வருடம் மிதமாய் தொடர்கிறது.அதனால் வழக்கமான ஆர்ப்பாட்ட கொண்டாட்டங்களுக்கு தடை!
அடுத்த வருடம் முழுதாய் நீங்கி - இயல்புக்கு திரும்பும் என நம்புகிறேன்!!! இரண்டாம் தாயகமன இந்த பாலை(குவைத்) எம்மையும் - பன்னூறாயிரத்தோர் வாழ்வையும் சோலை போல் வளமாகவே வைத்துள்ளதை வணங்கி - வாழ்த்துகிறேன் இந்நாளில்!!!

- குவைத்திலிருந்து ஹரி லக்ஷ்மன்

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us