துப்பாக்கி சுடும் போட்டியில் தாயும் மகளும் பரிசுகளை அள்ளினர் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

துப்பாக்கி சுடும் போட்டியில் தாயும் மகளும் பரிசுகளை அள்ளினர்

பிப்ரவரி 25,2021 

Comments

தென்னக அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி சேலம் மாவட்டத்தில் சக்கர வியூகம் எனும் துப்பாக்கி சுடும் வளாகத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தில் இருந்து சுமார் 300 க்கும் அதிகமான வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிக்காட்டினர்.

இந்தப்.போட்டியில் திருச்சி மாவட்ட ரைஃபிள் சங்கத்தில் இருந்து 25 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். இதில் சவுதி அரேபியாவில் வசித்து வருகின்ற, தமிழ் மக்களின் துயர் துடைக்க பல சேவைகளை ஜெத்தா முத்தமிழ்ச் சங்கத்தினருடன் இணைந்து செய்கின்ற சமூக சேவகர் தற்போது தாயகத்தில் வசிக்கின்ற திருச்சி பீமநகரைச் சேர்ந்த பதுருத்தீன் அப்துல் மஜீது மனைவி திருமதி ஃபைரோஸ் பதுருத்தீன் இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும், அவரின் மகள் செல்வி ஃபாத்திமா பதுருத்தீன் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் பெற்று பெண்கள் குலத்திற்கே பெருமை சேர்த்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சேலம் மாவட்ட காவல்துறை ஆணையர் செந்தில் வெற்றி பெற்றவர்களை பாராட்டி பரிசுகளை வழங்கி, பாரதி கண்ட புதுமைப் பெண்களாய் இவர்கள் பரிசு பெற்றதை பாராட்டுகின்றேன். பெண்கள் இம்மாதிரியான வீர விளையாட்டுகளில் தொடர்ந்து அதிக அளவில் பங்கெடுத்து தங்கள் திறமையை நீரூபிக்கவும், தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் தற்காப்பு கலைகளை கற்றுத் தேற வேண்டும் என்றும் பேசினார்.

பரிசு பெற்ற பதுருத்தீன் அப்துல் மஜீது , சவுதி அரேபியாவில் ஜூபைல் நகரில் வசித்து வந்தாலும், சவுதி அரேபிய தமிழர்கள் நலம் காக்கும் அத்தனை தன்னார்வ தொண்டு அமைப்புகளுக்கும் பொருளாதார உதவிகள் செய்தும், தாயகத்தில் வறுமையில் வாடும் பலரது வாழ்வை மேம்படுத்தியும் இருக்கின்றார். சாதி மத பேதமின்றி மனிதநேயத்தோடு சேவை செய்தும் தொடர்கின்றார். அவரது பங்களிப்பினைக் கண்டு ஜெத்தா வாழ் தமிழர்கள் பாராட்டாத நாட்களில்லை. அவரது குடும்பத்தினரை ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம் பாராட்டி மகிழ்கின்றது.

– தினமலர் வாசகர் ஜாகிர் ஹூசைன்

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us