துபாய் : துபாயில் உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு கடந்த 22.02.2021 சனிக்கிழமை அன்று இனணய வழியாக, கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளையும், அசிஸ்ட் வேர்ல்டு ரிக்காட்ஸ்ம் இணைந்து உலக சாதனை நிகழ்வை நடத்தியது.இந்த நிகழ்வில் உலகின் 7 கண்டத்திலுள்ள 42 நாடுகளிலிருந்து 200 க்கும் மேற்பட்ட தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டு தொடர்ந்து 9 மணி நேரம் தமிழின் சிறப்பை பேசியும் தமிழ் வாழ்க என்று கூறியும், தமிழ் வாழ்க என்ற பதாகையும் காண்பித்தார்கள்.இந்த நிகழ்வானது Assist World Records மூலமாக உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோல் சென்ற வருடமும் கல்லிடைக்குறிச்சி திலகர் வித்யாலயம் மேனிலைப்பள்ளியின் 2020 மாணவர்கள் தமிழ் என்ற எழுத்து வடிவத்தில் நின்று உலக சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கது.தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்துவதற்காக உலகத் தமிழர்களை ஒன்றிணைத்து இந்த உலக சாதனையை செய்த கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை நிறுவனத்தை பல்வேறு நாடுகளில் இருந்து கலந்து கொண்ட உலகத் தமிழர்கள் பாராட்டி வருகின்றனர்.-- நமது செய்தியாளர் காஹிலா
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.