அயர்லாந்திலிருந்து உருவான தமிழ் மொழிப் புகழ்ச்சிப் பாடல் வெளியீடு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அயர்லாந்திலிருந்து உருவான தமிழ் மொழிப் புகழ்ச்சிப் பாடல் வெளியீடு

மார்ச் 01,2021 

Comments

  தாய்மொழிகள் தினத்தைச் சிறப்பிக்கும் விதமாக ஐரோப்பிய தேசமான அயர்லாந்தின் லெட்டர்கென்னி என்ற நகரில் வசிக்கும், காரைக்குடிக்கு அருகில் உள்ள கூத்தலூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்க் கவிஞர் தமிழ்மைந்தன் என்ற புனைப்பெயரால் அழைக்கப்படும் ஜான் ரிச்சர்டு எழுதி தயாரித்த 'தமிழே உயிர்மொழி' என்ற தமிழ்மொழிப் புகழ்ச்சிப் பாடல் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கோ. பாலசுப்ரமணியனால் 22-02-2021 அன்று வெளியிடப்பட்டது.


தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த தாய்மொழிகள் தின விழாவில் துணைவேந்தரால் வெளியிடப்பட்டு, திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர் தங்க. ஜெயராமனால் பெற்றுக் கொள்ளப்பட்டது. பல்கலைக்கழகப் பேராசிரியப் பெருமக்கள், மாணவர்கள் அரங்கு நிறைய பங்கேற்ற இந்நிகழ்வில் தமிழ்ப் புகழ்ச்சிப் பாடல் ஒளிபரப்பப்பட்ட இப்பாடலை விழாவில் பங்கேற்றோர் வெகுவாகப் பாராட்டினர்.


பல்கலைக்கழகப் பதிவாளர் பேராசிரியர் கு.சின்னப்பன், மொழிப் புலத் தலைவர் இரா. காமராசு, இலக்கியப் புலத் தலைவர் பெ. இளையாப்பிள்ளை, மெய்யியல் துறை உதவிப் பேராசிரியர் கோ.ப. நல்லசிவம் ஆகியோர் உரையாற்றினர். தமிழ்ப் பல்கலைக்கழத்தில் இப்பாடலை வெளியிட அயலகக் தமிழ்க் கல்வித்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் குறிஞ்சிவேந்தன் உரிய ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.


வீடுகளில் பிறமொழிகளை முதன்மையாகப் பேசும் தமிழ் உறவுகள் ஒரு சிலரேனும், பாடலின் வழியாகத் தமிழ் பேச ஆரம்பித்தால் அதுவே பாடலின் நோக்கத்திற்கான வெற்றியாகும் என பாடலாசிரியர் தமிழ் மைந்தன் - ஜான் ரிச்சர்டு தெரிவித்தார்.



Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us