அபுதாபியில் இந்திய தூதரக அதிகாரியுடன் இந்திய சமூக நல மைய தலைவர் சந்திப்பு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அபுதாபியில் இந்திய தூதரக அதிகாரியுடன் இந்திய சமூக நல மைய தலைவர் சந்திப்பு

மார்ச் 03,2021 

Comments

அல் அய்ன் : அபுதாபி இந்திய தூதரகத்தின் மூத்த அதிகாரியாக சந்தீப் குமார் பய்யாபு சமீபத்தில் புதிதாக பொறுப்பேற்றார். அவர் அல் அய்ன் இந்திய சமூக நல மையத்தின் தலைவர் கீழக்கரை முபாரக் முஸ்தபாவை இந்திய தூதரக அலுவலகத்துக்கு வருமாறு அழைத்தார். அப்போது இந்திய தூதரக அதிகாரிக்கு முபாரக் முஸ்தபா பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது கொரோனா பாதிப்பு சமயத்தில் சிறப்பாக செயல்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் அல் அய்ன் நகரில் வசித்து வரும் இந்தியர்களது நிலைமை குறித்தும் மற்றும் தேவைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அவர் கேட்டறிந்தார்.சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்த 50 பணிப்பெண்கள் தூதரகத்தின் ஒத்துழைப்புடன் அல் அய்ன் இந்திய சமூக நல மையம் தாயகம் செல்ல ஏற்பாடு செய்தது. இந்த சிறப்பான செயல்பாட்டுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

தொடர்ந்து அல் அய்ன் இந்திய சமூக நல மையம் இந்திய சமூகத்தினருக்கு சிறப்பான சேவைகளை செய்ய அனைத்து விதமான ஒத்துழைப்புகளும் வழங்கப்படும் என்றார்.

-- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us