நான்கு சிங்கப்பூரர்களும், நான்கு நாடுகளும் இணைந்து ஆசிய சாதனை | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

நான்கு சிங்கப்பூரர்களும், நான்கு நாடுகளும் இணைந்து ஆசிய சாதனை

மார்ச் 04,2021 

Comments

கோவிட் -19 நோய் தொற்றுக் காலகட்டத்தில், துவந்து கிடக்கும் கவிஞர்களைத் தட்டிக்கொடுத்து, அவர்களின் கற்பனை வரிகளுக்கு இசை மூலம் உயிர்ப்பித்து, உலகெங்கும் வாழும் தமிழர்களை இணைக்கவும், அதே சமயம் அந்த நிகழ்ச்சி ஒரு சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு இசை நிகழ்ச்சியை மெய்நிகரில் செம்மையாக உருவாக்கி, இயக்கி வெற்றிப்பெற்றுள்ளார், சிங்கப்பூர் எழுத்தாளர், பதிப்பாளர், குறும்பட இயக்குநர் மில்லத் அகமது. இந்த இசை நிகழ்ச்சியின் நாயகன் பகரைன் நாட்டில் இந்தியன் பள்ளியில் இசையாசிரியராக பணிபுரியும் பால் முகமது. தான் ஒருவராக இருந்து, இந்தச் சவாலை செய்வதாக முன்வந்தார். இந்நிகழ்ச்சிக்கு ஆதரவாளர்களாக சிங்கப்பூரைச் சேர்ந்த வீ.கலைச்செல்வம், முனைவர் ராஜேஸ்வரி ஸ்ரீனிவாசன், பிரேமா மகாலிங்கம் ஆகியோர் கைகொடுத்தனர். மலேசியாவை சேர்ந்த இயல் பதிப்பகம் உலக கவிஞர்களை ஒருங்கிணைக்க, நெல்லையை சேர்ந்த எஸ் ஈவென்ட்ஸ் இந்தியா விளம்பரம் மற்றும் ஆசியா சாதனை புத்தகப் பணிகளை சிறப்பாக செய்தனர். கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் தேதி மெய்நிகரில் நிகழ்ச்சி மலேசியாவிலிருந்து ஒளிபரப்பட்டது. மலேசியா, சிங்கப்பூர், தமிழகம், துபாய், இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த கவிஞர்கள் தங்களது பாடல்களை புலனம் மூலம் சிங்கப்பூருக்கு அனுப்பினார்கள். சிங்கப்பூரிலிருந்து பாடல்களை ஆசியா சாதனை புத்தக நடுவர்கள் குழுவிற்கு புலனம் மூலம் அனுப்பி, அவர்கள் சம்மதம் தெரிவித்த பின்னர் அது பகரைனுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டு, அங்கே தொண்டூழியர்கள் அந்தப் பாடலை அச்சிட்டு, பால் முகமதுவிடம் கொடுக்கப்பட்டது. உடனே அவர், அதற்கு மெட்டமைத்து, இசையுடன் பாடினார். இப்படியாக இடைவிடாது தொடர்ந்து மூன்று மணி நேரம் இசை நிகழ்ச்சியை தங்குதடையின்றி நடத்தினார். “மெய்நிகர் தளத்தில் தனி நபர் நேரடி பாடல் இசையமைப்பு, மூன்று மணி நேரத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலம் என 33 பாடல்களுக்கு இசையமைத்துப் பாடப்பட்டது. பாடல்கள் உடனடியாக பார்வையாளர்களால் வழங்கப்பட்டது. இந்தச் சாதனையை பால் முகமது பஹ்ரைனில் செய்தார்” இது ஆசியாவிலேயே புதிய சாதனை என்று ஜனவரி 4ஆம் தேதி ஆசியா புத்தகம் இந்தச் சாதனைக்கு அங்கீகாரம் வழங்கி, சாதனையாளர், இயக்குநர் மற்றும் ஆதரவாளர்களுக்குச் சாதனை சான்றிதழ் வழங்கியது. இந்தச் சாதனைக்கு உறுதுணையாக இருந்த ஆதரவாளர்கள் மற்றும் இயக்குநருக்குப் பாராட்டு விழா மார்ச் 03 ம் தேதி மாலை சிங்கப்பூரில் நடந்தது. ஆசியான் கவிஞர் க.து.மு. இக்பால் தலைமையேற்று சாதனையாளர்களுக்குப் பொன்னாடை அணிவித்து, சான்றிதழ்களை வழங்கினார். ஆசிரியர் ஜாகுர் உசேன் வழிநடத்த, செம்மொழி ஆசிரியர் எம். இல்யாஸ் நினைவுப்பரிசுகள் வழங்கினார். மில்லத் அகமது அனைவருக்கும் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியை நா. ரசீத் அலி ஏற்பாடு செய்தார். அரசாங்க சட்ட விதிமுறைப்படி எட்டு பேர்கள் மட்டுமே கலந்து சிறப்பித்தனர். – நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us