சென்னை, செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரி, தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து, 4-3-2021 வியாழக்கிழமை முதல், 8-3-2021 திங்கள் கிழமை வரை நாள்தோறும் மாலை 5.00 மணிக்கு உலக மகளிர் நாள் சிறப்பு நிகழ்வாக, இணையவழியிலான ‘பெண்மையைப் போற்றுவோம்’ எனும் தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்றை நடத்தி வருகிறது. இக்கருத்தரங்கில் இன்று (4-3-2021) ஹாங்காங், ஸ்கோப் சிட்டி பல்கலைக்கழகப் பகுதிநேர விரிவுரையாளர் மற்றும் ஹாங்காங், அகம் சொல்யூசன்ஸ் ஹாங்காங் நிறுவன இயக்குநருமான முனைவர் சித்ரா சிவக்குமாரின் “வரலாற்று சிறப்பு மிக்க பெண்கள்” எனும் தலைப்பிலான உரை இடம் பெற்றது.இந்நிகழ்வில் பல்வேறு நாடுகளிலிருந்து பேராசிரியப் பெருமக்களுக்கும், ஆய்வாளர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகத்தின் உறுப்பினர்களும் பங்கேற்று சிறப்பித்தனர்.
வரவேற்புரையை சென்னை – பெரம்பூர் செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரி,மொழித்துறைத் தலைவர் முனைவர் க. பிரீத்தா வழங்கினார். நன்றியுரையை அதே கல்லூரியின் உதவிப்பேராசிரியர் முனைவர் ஜெ. வள்ளி வழங்கினார். திருச்சி தூய வளனார் கல்லூரி தமிழ்த்துறை மேனாள் இணைப் பேராசிரியரும், திருச்சி சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழக தலைவருமான முனைவர் தி. நெடுஞ்செழியன் நிகழ்வை நெறியாளுகை செய்தார்.
– நமது செய்தியாளர் சித்ரா சிவக்குமார்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.