சிங்கப்பூரில் பங்குனி உத்திரப் பெரு விழா கோலாகலம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் பங்குனி உத்திரப் பெரு விழா கோலாகலம்

மார்ச் 29,2021 

Comments

சிங்கப்பூர் ஆலயங்களில் பங்குனி உத்திரப் பெரு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஈசூன் புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருக்கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா வெகு விமரிசையாக மார்ச் 19 முதல் 30 ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெற்றது. சிங்கப்பூரில் ஒவ்வொரு ஆலயத்திற்கும் தனிச் சிறப்பு உண்டு. பங்குனி உத்திரமென்றால் நூற்றுக் கணக்கான காவடிகள் விதம் விதமாக வைகறையிலிருந்தே அணிவகுத்துக் காட்சியளிப்பது தனிச் சிறப்பாக இருக்கும். இவ்வாண்டு சூழல் காரணமாக முன் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. எந்தவிதமான காவடியும் அனுமதிக்கப்படவில்லை. சமூக இடைவெளி விட்டு பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பக்தர்களுக்கு எவ்விதக் குறைபாடின்றி நேர்த்திக் கடன் செலுத்த பால் குடங்கள் ஆலயத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உத்திரப் பெரு விழா மார்ச் 19 முதல் 30 ஆம் தேதி வரை பல்வேறு தெய்விக நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. சிறப்பு நிகழ்ச்சிகளாக மார்ச் 24 ஆம் தேதி ஸ்ரீ கிருஷ்ணர் – ராமர் ஹோமங்கள் நடைபெற்றன. 25 ஆம் தேதி நவகிரஹ ஹோமம் மற்றும் ஸ்ரீ பைரவர் ஹோமங்களும் 26 ஆம் தேதி ஸ்ரீ மாரியம்மன் மற்றும் ஸ்ரீ பெரியாச்சி அம்மன் ஹோமங்களும் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தன. அன்று மாலை ஸ்ரீ முருகப் பெருமானின் ஆறு படை வீடுகளும் காட்சிப்படுத்தப்பட்டு ஆறு படை வீடுகளில் எழுந்தருளி அருள்பாலித்திடும் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத குமரப்பெருமானுக்கு ஒரே சமயத்தில் மகா தீபாராதனை காட்டப்பட்டது மெய்சிலிர்க்க வைத்த அருட் காட்சியாக அமைந்தது.
27 ஆம் தேதி ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஹோமம் – மூல மந்திர திரிசதி ஹோமம் – ஷண்முக அர்ச்சனை நடைபெற்றது ஒரு முத்தாய்ப்பு நிகழ்ச்சியாகும். 28 ஆம் தேதி பங்குனி உத்திரப் பெரு விழா வழக்கமான உற்சாகத்துடன் பக்தர்களின் ஒத்துழைப்போடு அமைதியாக நடைபெற்றது. 29 ஆம் தேதி மூல மந்திர ஹோமமும் ஸ்ரீ வள்ளி தேவ சேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் அபிஷேகமும் திருக்கல்யாண உற்சவமும் பக்தர்களின் “ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா “ கோஷமும் தெய்விக நாதஸ்வர இசையும் முழங்க நடைபெற்றன. 30 ஆம் தேதி ஸ்ரீ இடும்பன் பூஜையுடன் பங்குனி உத்திரப் பெரு வழா நிறைவு பெற்றது. ஆலய நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் மிகச் சிறப்பாகச் செய்திருந்தது பாராட்டுக்குரியதாகும்.
- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us