சிங்கப்பூரில் உலக மகளிர் தின விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் உலக மகளிர் தின விழா

ஏப்ரல் 01,2021 

Comments

சிங்கப்பூர் முஸ்லிம் லீக் மகளிர் பிரிவான வளர் பிறை மகளிர் வட்டத்தின் செயலவை உறுப்பினர்களுக்கான நியமனச் சான்றிதழ் வழங்கு விழா – அனைத்துலக மகளிர் தின விழாவின் ஒரு அங்கமாக ஜீவல் உணவக வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. புக்கிட் படோக் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் – சுகாதாரத் துறை பாராளு மன்றச் செயலாளருமான மாண்பமை ரஹாயூ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். பிற அமைப்புக்களின் சமூகத் தலைவர்களும் கலந்து கொண்டனர். சிங்கப்பூர் முஸ்லிம் லீக் தலைவரும் வளர் பிறை மகளிர் வட்ட ஆலோசகருமான புதிய நிலா மு.ஜஹாங்கிர் சிறப்புரை ஆற்றினார். நாடாளு மன்ற உறுப்பினர் நியமனச் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார். விழா சிறப்புற நடைபெற உதவிய ஆதரவாளர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி மகிழ்விக்கப்பட்டது. வளர்பிறை வட்டத் தலைவி திருவாட்டி அ.மஹ்ஜபீன் வரவேற்புரை ஆற்றினார். இன்றைய சூழல் கருதி தனிநபர் இடைவெளி விட்டு கடடுப்பாட்டுடன் விழா நடைபெற்றது. அறுசுவை விருந்துடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்.

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us