நியூஜெர்சியில் பங்குனி உத்திரப் பெருவிழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

நியூஜெர்சியில் பங்குனி உத்திரப் பெருவிழா

ஏப்ரல் 03,2021 

Comments

வட அமெரிக்கா நியூஜெர்ஸி மாகாணத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தெண்டாயுதபாணி திருக்கோவிலில் மார்ச் 27 மற்றும் 28, 2021ல் பங்குனி உத்திரத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த இரண்டு நாட்களில் சுமார் 200 அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முதல் நாள் காவடி கட்டும், அரோஹரா பூசையும் முடிந்த பின் மறுநாள் விழாவிற்கான ஏற்பாடுகள் துவங்கின. பெண்களுக்கு இணையாக ஆண்களும் விறுவிறுப்பாக பங்குனி உத்திரப் பூசை சாப்பாடிற்கான காய்கறிகளை திருத்தி சமையலுக்குத் தயார் செய்தனர். அதிகாலையில் அருகில் உள்ளவர்களின் வீடுகளில் பூசை சாப்பாடு செய்யப்பெற்று கோவிலுக்குக் கொண்டு வரப்பட்டது. பங்குனி உத்திரத்தன்று காவடி ஆட்டம், பால் குடம், வேல் அபிஷேகம், அலங்காரம், வழிபாட்டுப் பாடல்கள், முருகனுக்குப் படையல் விருந்து என சுமார் நான்கு மணி நேரம் விழா களை கட்டியது. அன்பர்களுக்கு வாழை இலையில் விருந்து படைத்த போது இந்தியாவில் இருப்பது போன்ற உணர்வு அனைவருக்கும் மகிழ்வைத் தந்தது. இந்தப் பேரிடர் காலத்திலும் பலர் முன் வந்து முருகனுக்காக இரண்டு நாட்களும் பணி செய்தது மிகவும் நெகிழ்வாக இருந்தது. இந்த விழா சிறப்புற நடைபெறப் பெரிதும் துணை நின்ற நன்கொடையாளர்கள், தன்னார்வலர்கள், உற்சாகத்தோடு பங்குபெற்ற குழந்தைகள், மற்றும் அன்பர்கள் அனைவருக்கும் நன்றி. சொந்த ஊர்களிலிருந்து வெகு தொலைவில் வாழ்ந்த போதும் இது போன்ற திருவிழாக்களில் கலந்து கொள்ளும் போது வேர்கள் வலுவாகிறது.– தினமலர் வாசகர் விசாலாட்சி கண்ணன்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us