சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம் ஹூஸ்டன் தமிழ் இருக்கைக்கு நிகழ்த்திய நிதிதிரட்டும் சிறப்பு நிகழ்வு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம் ஹூஸ்டன் தமிழ் இருக்கைக்கு நிகழ்த்திய நிதிதிரட்டும் சிறப்பு நிகழ்வு

ஏப்ரல் 05,2021 

Comments

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வுக்கான இருக்கை அமைக்க வட அமெரிக்கா முழுவதுமாக நிதிதிரட்டும் பணி நடந்து வருகிறது. அதன் முதற்கட்டமாக சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம் கடந்த மார்ச் 27 ஆம் தேதி சான் ஆண்டோனியோ தமிழ் மக்களும்,ஹூஸ்டன் தமிழ் இருக்கையின் தலைவர்,பொருளாளர் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வு முகப்புத்தகத்திலும் யு டியூபிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. தலைவர் குமார் துவக்க உரை நிகழ்த்த, பின் தமிழ்த்தாய் வாழ்த்து ஒளிபரப்பப்பட்டது. ஹூஸ்டன் தமிழ் இருக்கை தலைவர் சாம் கண்ணப்பன் காணொளி மூலம் இவ்விருக்கை பற்றிய தமிழ் கலாச்சாரம்,பண்பாட்டுக்கான முக்கியத்துவம் பற்றிய விளக்கும் செய்தியை வழங்கினார். அதனைத் தொடர்ந்து டாக்டர் அப்பனின் அருமையான விளக்க உரையும், சயின்டிஸ்ட் கணேசன் வழங்கிய தெளிவான காணொளியும் ஒளிபரப்பப்பட்டது. கணேசன் 10 ,000 டாலர்கள் நிதியை சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம் மூலமாக வழங்கியது மிகவும் பாராட்டுதலுக்குரியது.
தமிழ் இருக்கையின் நிதி துணைத் தலைவர் துப்பில் நரசிம்மன் இவ்விருக்கையின் தனித்துவ செயல்களையும், இதற்காக அளிக்கப்படும் நிதி எவ்வாறு பயன்படப்போகிறது என்றும் விளக்கினார்.
சான் ஆண்டோனியோவைச் சேர்ந்த டாக்டர் பழனியப்பன் கலந்து கொண்டு 10 ,000 டாலர்கள் நிதி வழங்கினார் என்பது மிகவும் மகிழ்வான ஒன்று.

ஆயிரம் டாலர்கள் மற்றும் ஆயிரத்திற்கு மேல் நிதிஉதவி அளிப்போருக்கு அவர்கள் பெயர்கள் ஹூஸ்டன் பல்கழலைக்கழகத்தில் அமைக்கப்படும் டிஜிட்டல் சுவரில் நிரந்தரமாக பதிவாகியிருக்கும். இது எங்கும் இல்லாத சிறப்பான ஒன்று!

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக தமிழுக்கே உரிய சிறப்பான பட்டிமன்றப் பேச்சில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும் மதிப்பிற்கும்,மரியாதைக்கும் உரிய ராஜா மற்றும் திருமதி.பாரதி பாஸ்கரும் கலந்து கொண்டனர். திருமதி.ஜெனி வரவேற்றார். பல கேள்விகளுக்கு விடை அளிக்கும் வண்ணம் அவர்கள் இருவரின் பேச்சு அழகாய் இருந்தது.

அதன் பின்னர் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கார்த்திகேயனுக்கு நன்றி கூறினார். அதனைத் தொடர்ந்து ஹூஸ்டன் பாரதி கலை மன்றத்தின் தலைவர் கோவிந்தன் மற்றும் ஹூஸ்டன் தமிழ் இருக்கையின் ஒருங்கிணைப்பாளர் திருவும் அனைவரோடும் கலந்துரையாடினர்.

நிகழ்வின் நடுவே பாடகி விஷ்ணு பிரியா அழகான ஒரு பாடல் பாடினார். கிட்டத்தட்ட இரண்டரை மணிநேரம் நடந்த இம்மெய்நிகர் நிகழ்வை ஷீலா ரமணன் தொகுத்து வழங்க இந்நிகழ்வு இனிதே நடந்தேறியது. இந்நிகழ்வு முழுவதையும் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் முகநூலில் காணலாம்.

மேலும் நிதி அளிக்கும் விவரங்களுக்கு ஹூஸ்டன் தமிழ் இருக்கையின் வலைத்தளத்தில் சென்று அறியலாம்.
Website : https://houstontamilchair.org/donors

- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.