சிங்கப்பூரில் இமயம் தமிழ்மொழி விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் இமயம் தமிழ்மொழி விழா

ஏப்ரல் 05,2021 

Comments

என்.பி.எஸ் சர்வதேசப் பள்ளியின் இமயம் தமிழ்மொழி விழா இணையம் வழியாக மிகச் சிறப்பாக நடைபெற்றது.பள்ளி என்பது குழந்தைகளுக்குப் பாடம் மட்டும் போதிப்பதாக இருக்கக் கூடாது.மாணவர்களின் தனிப்பட்ட திறன்களை வெளிக்கொணர்வதே என்.பி.எஸ் சர்வதேசப் பள்ளியின் நோக்கமாகும். அதற்காகத்தான் பள்ளிகளில் பல விழாக்கள் கொண்டாடப்படுகிறது.அவற்றுள் மிகவும் முக்கியமானது தான் “இமயம் தமிழ்மொழி விழா”வருடா வருடம் நடக்கும் இந்த விழா இவ்வாண்டு முதன் முதலாக இணையம் வழி நடந்தது. இதில் பட்டிமன்றம் இரண்டு பிரிவாக நடந்தன. முதல் பிரிவில் ஆறு நாடுகளைச் சார்ந்த சர்வதேச அளவில் ஸ்ரீஷா சுவாமிநாதன் (என்.பி.எஸ்.சர்வதேச பள்ளி, சிங்கப்பூர்) அனன்யா அசோக் (இந்திய சர்வதேச பள்ளி, ஜப்பான்) அத்விகா சச்சிதானந்தம் (மினட்டோன்கா நடுநிலைப்பள்ளி, அமெரிக்கா) பிரித்திகா ராஜேஸ் (கெம்ஸ்போர்டு உயர்நிலைப்பள்ளி, பிரிட்டன்) கோபிகா ராமமூர்த்தி (மகாத்மா மாண்ட்ட சேரி மெட்ரிகுலேசன் உயர்நிலைப்பள்ளி, இந்தியா) மற்றும் ஷினாஷ் சுல்தான் (இந்தியப் பள்ளி, பஹ்ரைன்) ஆகிய ஆறு நாடுகளை சார்ந்த உயர் நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு, கல்வி மேம்பட பெரிதும் உதவுவது வெளிச்சூழலே? வீட்டுச் சூழலே? என்னும் தலைப்பில் அவர்களுடைய வாதத்திறமையை வெளிக்காட்டினர். இதில் நடுவராக திருமதி.கவிதா ஜவஹர் பங்கேற்று மாணவர்களை வழிநடத்தினார். சிறப்பு விருந்தினராக திரு.மு.ஹரிகிருஷ்ணன், தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத் தலைவர் பங்கேற்றார்.மற்றொரு பிரிவில் ஸ்ரீநிதி ரங்க பிரசாத் (பியர்ஸ் உயர்நிலைப்பள்ளி), பூஜாஸ்ரீ பாலமுருகன் (புனித மார்க்ரட் உயர்நிலைப்பள்ளி) ,அப்ரா முகம்மது யாசின் (பிராட்ரிக் உயர்நிலைப்பள்ளி) ,விஷாலி சுப்ரமணியன் (என்.பி.எஸ்.சர்வதேசப் பள்ளி) பூஜா பாலமுருகன் (சோ சூ ஹாங் உயர்நிலைப்பள்ளி) ரமேஷ் கனியமுது (ஆங்கிலோ சைனீஷ் உயர்நிலைப்பள்ளி) ஆகிய சிங்கப்பூரில் உள்ள ஆறு பள்ளிகளின் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் “இன்றைய இளையர்களிடம் பெரிதும் வலியுறுத்த வேண்டியது படிப்பே? பண்பாடே?” என்னும் தலைப்பில் மிகச்சிறப்பாக வாதாடினர். அதற்கு திரு.கண்ணன் சேஷாத்திரி அவர்கள் நடுவராக இருந்தார்.உலகப் பொதுமறையாம் திருக்குறளிலிருந்து “குறளின் குரல் விளையாட்டு” என்ற வினாடி வினா இரு பிரிவுகளாக நடைபெற்றன.முதல் பிரிவில் ஒரு வார்த்தையை விடுத்தும், இரண்டாவது பிரிவில் இரண்டு வார்த்தைகளை விடுத்தும் வினாக்கள் கேட்க பட்டன. முதல் பிரிவில் பிராட்ரிக் உயர்நிலைப்பள்ளி, யுவபாரதி சர்வதேசப் பள்ளி, புனித பாட்ரிக் பள்ளி, பிங்யிஉயர்நிலைப்பள்ளி, டான்சோங் கட்டாங் மாணவிகள் பள்ளி, பெடோக் உயர்நிலைப்பள்ளி, உமப்புலவர் தமிழ் மொழி சங்கம், பாசிர் ரிஸ் கிரஸ்ட் உயர்நிலைப்பள்ளி, குலோபல் இந்திய சர்வதேசப் பள்ளி, புனித மார்க்கெரட் உயர்நிலைப்பள்ளிகளை சார்ந்த மாணவர்களும் இரண்டாவது பிரிவில் உட்லேண்ட் உயர்நிலைப்பள்ளி, பிராட்ரிக் உயர்நிலைப்பள்ளி, யுவபாரதி சர்வதேசப் பள்ளி, விக்டோரியா பள்ளி, புனித பாட்ரிக் பள்ளி பிங்கி உயர்நிலைப்பள்ளி. குலோபல் சர்வதேச பள்ளி (கிழக்கு பிரிவு) பெடோக் உயர்நிலைப்பள்ள உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையம், ஆங்கிலோ-சைனீஸ் உயர்நிலைப்பள்ளி, பாசிர் ரிஷ் கிரஷ்ட் உயர்நிலைப்பள்ளி, குலோபல் இந்திய சர்வதேசப் பள்ளிகளை சார்ந்த மாணவர்களும் கலந்து கொண்டனர். இதை வினாடி வினா நிபுணர் திரு.சரவணகுமார் வழிநடத்தினார். இதற்கு நடுவர்களாக திருமதி.பாஸ்கரன் கங்கா, திரு.அந்தோணிராஜ் ஜோசப், திரு.ஜமால் அப்துல் நாசர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக தமிழ் மொழி பண்பாட்டு கழகத் தலைவர் திரு.மு.ஹரிகிருஷ்ணன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.இவ்விழா மாணர்வர்களிடம் தமிழ் ஆர்வத்தை தூண்டும்படி இனிதே நடைபெற்றது .இமயம் தமிழ் மொழி விழா சர்வதேசப்பள்ளிகளையும் , சிங்கப்ப்பூர் பள்ளிகளையும் இணைக்கும் பாலமாக இருந்தது.– நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us