“வானமே எல்லை!” -சிங்கப்பூரில் மகளிர் கொண்டாட்ட நிகழ்ச்சி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

“வானமே எல்லை!” -சிங்கப்பூரில் மகளிர் கொண்டாட்ட நிகழ்ச்சி

ஏப்ரல் 09,2021 

Comments

சிங்கப்பூர் அரசு 2021ஆம் ஆண்டை மகளிரைக் கொண்டாடும் ஆண்டாக அறிவித்துள்ளதையொட்டி, பெண்களைப் பெருமைப்படுத்தும் விதமாக, சிங்கப்பூரில் செயல்படும் அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம், மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியாக “வானமே எல்லை என்ற நிகழ்ச்சியை மார்ச் 28ம் தேதி இணைய வாயிலாக சிறப்பாக நடத்தியது.நமது சமுதாயமேம்பாட்டில் பெண்களின் பங்களிப்பு இன்றியமையாதது.மனித வாழ்வியலை அடுத்த கட்டத்துக்கு முன்னேற்றி செல்வதில் பெண்கள் பெரும் சக்தியாக திகழ்கிறார்கள் என்றால், அதுமிகையாகாது.சாதிக்க துடிக்கும் பெண்கள் மனதில் மேலும் ஊக்கத்தை தூண்டும் வண்ணம் இந்த நிகழ்ச்சி அமைவதற்காக, சிங்கப்பூரின் பிரபலமான தன்முனைப்புப் பேச்சாளர் திருமதி சரோஜினி பத்மநாதன் சிறப்பு பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்தார்.கடந்த 36 ஆண்டுகளாக சிங்கப்பூர் பொதுத்துறையில் பல்வேறு தலைமைத்துவ பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவத்துடனும், பெண்கள் மற்றும் குடும்பம் போன்ற தலைப்புகளில் பல பட்டறைகள் நடத்திய நிபுணத்துவத்துடனும், திருமதி சரோஜினி பத்மநாதன், தன்னம்பிக்கை தான் பெண்களின் வளர்ச்சிக்கான மூலதனம் என்ற உட்கருத்துடன் பெண்கள் மேம்பாட்டின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார். பெண்கள் மென்மேலும் வளர்ந்து வெற்றி பெற‘HHH’ (Head + Heart + Hand) என்ற சூத்திரத்தை கற்பித்தார்.இதன் வழி அவர் கூறியது, பெண்களின் உயர்வுக்கு அவர்களின் சிந்தனைகள் தெளிவாகவும், புதுமையாகவும், சிறந்த திட்டமிடுதலும் வேண்டும், பெண்களின் சீரிய சிந்தனைகளை அவர்கள் முழுமனதுடனும்,மனவலிமையுடன் அனைத்து செயல்களையும் தங்கள் கரங்களின் கடின உழைப்பின் மூலம் வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும் என்பதே இந்த சூத்திரத்தின் விளக்கம். ‘உள்ளம் என்பது எப்போதும் உடைந்து போகக்கூடாது; என்ன இந்த வாழ்க்கை என்று எண்ணம் தோன்றக்கூடாது என்ற வரிகளை மேற்கோள் காட்டி, பலவித எடுத்துக்காட்டுகளுடன் பல பரிமாணங்களைத் தொட்டுப் பேசிய அவர், தனது சிறு வயதில் தன்னம்பிக்கையுடன் தான் மேற்கொண்ட கடல்வழி பயணத்தை பற்றி விளக்கிக் கூறி அனைவர் மனதிலும் தன்னம்பிக்கையை நிறைத்து தனது உரையை நிறைவு செய்தார்.மேலும் பேச்சாளர்கள், திருமதி விஜி ஜெகதீஷ்வணிகம் மற்றும் தொழில் முனைவு’ என்ற தலைப்பிலும், முனைவர் கண்ணாத்தாள் நடராஜன்கல்வியின் சிறப்பு’என்ற தலைப்பிலும், திருமதி மஹாலட்சுமி வெங்கட்ராமன்பெற்றோரும் பிள்ளை வளர்ப்பும்’ என்ற தலைப்பிலும், திருமதிஅலமேலு ஐங்கரன் ‘சமூக சேவை’என்ற தலைப்பிலும் தங்களது சொந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டு அனைவர் மனதிலும் நம்பிக்கையை விதைத்தனர்.இன்றைய அதிநவீன அதிவேக உலகத்தில் பெண்கள் மன உறுதியுடனும் மன ஆற்றலுடனும் உந்துதல் மிக்க வெற்றிப் பயணத்தை அமைத்துக் கொள்ள பாதை காட்டிய இந்த “வானமே எல்லை”நிகழ்ச்சி முற்றிலும் பெண்களே வழி நடத்திய பெண்களுக்கான நிகழ்ச்சி என்பது தனிச்சிறப்பு!

நிகழ்ச்சியை வரவேற்புரை ஏற்று தொடங்கி வைத்தார் செயலாளர் செல்வி ஸ்வர்ணா வீரப்பன், தொகுத்து வழங்கினார் திருமதி யமுனா ஹர்ஷவர்தனா மற்றும் நன்றியுரை கூறி நிறைவு செய்தார் ஏற்பாட்டு குழு தலைவர் திருமதி.விஜயலட்சுமி சசிக்குமார்.
தினமலர் வாசகர் கார்த்திகேயன் நடராஜன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us