ஆக்லாந்தில் தியாகராஜ ஆராதனை | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஆக்லாந்தில் தியாகராஜ ஆராதனை

ஏப்ரல் 11,2021 

Comments

நியூசிலாந்து கர்நாடிக் மியூசிக் சொசைட்டி சார்பில் ஏப்ரல் 10 ம் தேதி அன்று தியாகராஜ ஆராதனை மிகச்சிறப்பாக, ஒனேஹங்காவில் உள்ள சாந்தி நிவாஸ் சென்டரில் நடத்தப்பட்டது. காலை 8 மணிக்கு ஸ்ரீ விநாயகருக்கும் மற்றும் சத்குரு தியாகராஜருக்கும் பூஜை மற்றும் ஆரத்தியுடன் ஆராதனை தொடங்கியது. ஆக்லாந்தில் உள்ள இசை அறிஞர்கள், இசை ஆசிரியர்கள் டாக்டர். அசோகமல்லூர், யசோ மஹேந்திரன், பிரியா விஜய், மாலா நட்ராஜ், துளசி பிரபாகரன் கீதா நாராயணன் மற்றும் அவர்களிடம் பயிலும் மாணவ மாணவிகள் மற்றும் இசை ரசிகர்கள் பலரும் சேர்ந்து கொண்டு தியாகராஜரின் சௌராஷ்ட்ரா ராகத்தில் அமைந்த மகா கணபதிம் என்ற கீர்த்தனையை பாடி தொடங்கி, பின் ஸத்குரு தியாகராஜர் இயற்றி பாடிய பஞ்ச ரத்ன கீர்த்தனைகளை (முறையே நாட்டை ராகத்தில் ஜகதா நந்தகராக, கௌள ராகத்தில் துடுக்குகள், ஆரபியில் சாதிஞ்சனே , வராளி ராகத்தில் அமைந்த கனகண ருசிரா இறுதியாக ஸ்ரீ ராகத்தில் அமைந்த எந்தரோ மஹானுபாவுலு) மனமுருகி பாடி ஸ்ரீ தியாகராஜருக்கு அஞ்சலி செய்தனர்.
பின்னர் தியாகராஜருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, வ‌ந்திருந்த அனைவ‌ருக்கும் காலை உணவு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து. தொடர்ந்து வாய்ப்பாட்டு, வயலின், வீணை, புல்லாங்குழல் மற்றும் மிருதங்கம் கற்கும் மாணவ மாணவிகளின் கச்சேரி அமைந்தது. அவர்களை தொடர்ந்து இசை கற்பிக்கும் ஆசிரியர்களின் கச்சேரி தனி தனியாகவும் ஒரு குழுவாகவும் பாடி ஸ்ரீஸத்குருவிற்கு அவர் இயற்றிய கீர்த்தனைகளால் பாடி அஞ்சலி செலுத்தினர். இசை கலைஞர்களின் பாட்டும் அவர்களது மாணவ மாணவிகளின் கச்சேரியும் ரசிகர்களின் செவிகளை குளிரச் செய்‌தது.
மாணவ மாணவிகள் பாடியும், வீணை, வயலின் வீணை, மிருதங்கம் மற்றும் புல்லாங்குழல் இசைத்தும் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தியது மிகவும் பாராட்டத்தக்கது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆராதனை விழாவில் கலந்து கொண்டனர். பின்னர் மங்களத்துடன் இசை நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. இரண்டு மணியளவில் நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றது. நியூசிலாந்து கர்நாடிக் மியூசிக் சொசைட்டியின் தலைவர் ரவி நாகராஜன் அனைவருக்கும் நன்றி கூறினார். பின்னர் அனைவருக்கும் மகா பிரசாதம் வழங்கப்பட்டது.– நமது செய்தியாளர் சந்திரா சங்கரன்

Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us