பஹ்ரைனில் சித்திரை திருவிழா பன்னாட்டு சிறப்பு பட்டிமன்றம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பஹ்ரைனில் சித்திரை திருவிழா பன்னாட்டு சிறப்பு பட்டிமன்றம்

ஏப்ரல் 11,2021 

Comments

சித்திரை விழா 2021 முன்னிட்டு சிறப்புப் பன்னாட்டுப் பட்டிமன்றம் பக்ரைன் செந்தமிழ் சொல்வேந்தர் மன்றம், தில்லி கலை இலக்கிய பேரவை, தமெரிக்கா டிவி முன்னின்று ஏற்பாடு செய்ய, உலகத் தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து இணைய வழியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது.

திரைப்பட நடிகர் மற்றும் இயக்குநர் கே.பாக்கியராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை வழங்கி சிறப்பித்தார். தமிழ்ப்பணி செம்மல் குமார், தமெரிக்கா டிவி நிறுவனர் மகேஷ் நாட்டாமை மற்றும் சொல்வேந்தர் பொன் சங்கர பாண்டியன் கேட்ட கேள்விகளுக்கு சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் பதில் அளித்து அவையோரை மகிழ்வித்தார் கே.பாக்கியராஜ். நிகழ்ச்சியை முனைவர் கவிதா ராஜசேகர் நெறியாளராக நல்ல தமிழில் இன்முகத்துடன் நெறியாள்கை செய்தார்.

முன்னதாக இந்திய நேரம் மாலை 5 மணிக்கு யு.மேகநாதன் குழுவுடன், நாதஸ்வரம், மிருதங்கம் முழங்க மங்கள இசையுடன் நிகழ்ச்சி துவங்கியது. ப. அறிவழகன் வரவேற்புரை வழங்க, பேராசிரியர் சுப மாரிமுத்து தலைமையுரை வழங்க, வணக்கம் மலேசியா நாளிதழின் நிறுவனர் தியாகராஜன் முத்துசுவாமி கௌரவ விருந்தினர் உரை வழங்க, டோக்கியோ தமிழ் சங்கத்தின் தலைவர் கணேசன் ஹரிநாராயணன் துவக்க உரையுடன் நிகழ்ச்சி புத்துணர்ச்சியுடன் ஆரம்பம் ஆனது. சிறப்பு விருந்தினர் இயக்குநர் கே.பாக்கியராஜை, திருமதி சத்யா அசோகன் சிறப்பாக அறிமுகம் செய்து வைத்தார்.

இயக்குநர் கே.பாக்கியராஜ் அவையோரை ஊக்கப்படுத்தும் விதமாகவும், உற்சாகப்படுத்தும் விதமாகவும் ஆழமான கருத்துக்களை அவருக்கே உரித்தான பாணியில் சுவைபட பேசினார். உரத்த சிந்தனை தலைமை ஆசிரியர் உதயம் ராம் சிறப்பு விருந்தினரை வாழ்த்தி பேசினார். 'மன அழுத்தம் அதிகரித்து வருவதற்குப் பெரிதும் காரணமாக இருப்பது குடும்பச் சூழலா? வெளிப்புறச் சூழலா?' என்ற தலைப்பில் சிறப்பு பன்னாட்டு பட்டிமன்றம் நடைபெற்றது. இதன் நடுவராக, கே. வி. கே பெருமாள் , பொறுப்பேற்று சிறப்பாக வழிநடத்தி சென்றார். 'குடும்பச் சூழலே' என்ற அணியில் ஐரோப்பாைவை சேர்ந்த மருத்துவர் விஜய், தில்லியை சேர்ந்த திருமதி சீதாலட்சுமி ராமசந்திரன், மற்றும் பக்ரைனை சேர்ந்த ஷீனாஸ் சுல்தானா ஆகியோர் கலந்து கொண்டு வாதாடினர்.

'வெளிப்புற சூழலே' என்ற தலைப்பில் திருமதி விஜயலட்சுமி இராமசுப்பிரமணியம், நைஜீரிய தமிழ் சங்கத்தின் துணைத் தலைவர் சங்கர் பிரபாகரன் மற்றும் ஓமன் நாட்டிலிருந்து திருமதி தருமாம்பாள் சீனிவாசன் ஆகியோர் திறம்பட வாதாடினர். 'மன அழுத்தம் அதிகரித்து வருவதற்குப் பெரிதும் காரணமாக இருப்பது குடும்பச் சூழலே' என்று அருமையான தீர்ப்பை நடுவர் கே. வி. கே பெருமாள் வழங்கினார். பின்னதாக ஸ்ரீநாத் எலிவேட்டர்ஸ் நிறுவன இயக்குனர் கண்ணன் வாழ்த்துரை வழங்க, மகேஷ் நாட்டாண்மை நன்றியுரை நவில நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. இந்நிகழ்ச்சியை சூம் செயலி மூலம் நேரடியாக சுமார் 270 உலகத்தமிழர்களும், தமெரிக்கா தொலைக்காட்சி நேரலை வாயிலாக சுமார் 8000 தமிழ் நெஞ்சங்களுக்கு கண்டு களித்தனர். இந்நிகழ்ச்சி 10 ஏப்ரல் 2021, சனிக்கிழமை மாலை இந்திய நேரம் மாலை 5 மணிக்கு துவங்கி 8.30 மணிக்கு நிறைவடைந்தது.

– தினமலர் வாசகர் பொன் சங்கர பாண்டியன்

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us