அபுதாபியில் தமிழக இளைஞரை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைத்த அய்மான் சங்கம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அபுதாபியில் தமிழக இளைஞரை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைத்த அய்மான் சங்கம்

ஏப்ரல் 12,2021 

Comments

அபுதாபி : அபுதாபியில் வேலை இழந்து ஊருக்கு செல்ல முடியாமல் தவித்த தமிழக இளைஞரை 07/04/2021 அன்று நாட்டிற்கு பத்திரமாக திருப்பி அனுப்பிய அய்மான் சங்கம்.
"அபுதாபியில் நகர மையத்தில் இருக்கும் ஒரு பூங்காவில் வயிற்றுப்பசி யோடும் உடுத்த உடையும் உண்ண உணவும் இல்லாமல் படுத்து உறங்கும் ஒரு மனிதர் இருக்கிறார். அவருக்கு உதவ இயலுமா?" என்று ஒரு கோரிக்கை அய்மான் பைத்துல்மால் செயலாளர் நிஜாம் மைதீன் அவர்களுக்கு வைக்கப்பட்டதும் உடனடியாக அந்த மனிதரைச் சென்று அய்மான் நிர்வாகிகள் சந்தித்தார்கள்.
உடல் வெகுவாக நலிந்த நிலையில், பசியாலும் உறக்கமற்ற நிலையாலும் காலநிலை மாற்றங்களை நேரடியாக உள்வாங்கிய சோர்விலும் இருக்கும் அந்த மனிதரின் கையில் அவரது கடவுச்சீட்டின் நகல் தவிர்த்து வேறொன்றுமில்லை
'கொரானா'வின் காரணமாக கடந்த வருடம் ஜூலை மாதத்தில் தன் பணியாற்றிய நிறுவனத்திலிருந்து பணி விலக்கம் செய்யப்பட்டதாகவும் அதன் பின்னர் அபுதாபியில் வேலை எதுவும் கிடைக்காததாலும் நண்பர்கள் யாருமில்லாததால் வேறு உதவிகளும் கிடைக்காததாலும் ஊருக்குச் செல்வதற்குக் கூடப் போதுமான பணவசதி இல்லாததால் கிடைத்த இடங்களில் தங்கி கிடைத்த உணவை உண்டு ஒன்றுக்கும் வழியில்லாமல் கடைசியாக இந்த பூங்காவில் தங்க நேர்ந்த அவலமான தன் வாழ்க்கைச் சூழலை எடுத்துரைக்கிறார் அந்த மனிதர்.
ஷேக் தாவூத் பணிக்கான அனுமதி நிறைவு பெற்று எட்டு மாதங்களுக்கும் மேல் ஆகிவிட்டதால் அமீரக அரசின் குடி உரிமைச் சட்டங்களின்படி எட்டு மாதங்களுக்கும் சேர்த்து அபராதமாக இந்திய ரூபாய் மதிப்பில் சில லட்ச ரூபாய்கள் வரை கட்ட வேண்டியிருக்கும் என்பது.
ஆனால் இவற்றை விட மிக மிக முக்கியமான இன்னொரு பெரிய சவால் இருந்தது. அனுமதி காலம் முடிந்த பின்பும் 8 மாதங்களுக்கு மேல் தங்கியிருந்ததால் அவருக்கான சிறைத்தண்டனை குறித்த கேள்வி. இந்தக் கேள்விக்கு மட்டும் என்ன செய்வது என்ற பதில் ஏதும் கிடைக்கவில்லை.
தொடர்ச்சியாக சமூக அக்கறையோடும் அர்ப்பணிப்போடும் பல பணிகளை இந்தியத் தூதரகத்தின் வழியாக அபுதாபி அய்மான் சங்கம் ஏற்கெனவே முன்னெடுத்துச் செய்து வருவதாலும் கோரிக்கைககள் ஏற்கப்பட்டது
அமீரக அரசின் குடியுரிமை தொடர்பான அமைச்சகத்திடம் இந்தியத் தூதரகம் பணி இழந்த மனிதர், ஊருக்குச் செல்லக் கூடப் பணம் இல்லாதவர் எப்படி சில ஆயிரம் திர்ஹாம்கள் கட்ட இயலும் என்பதைப் பேசி நிலையை எடுத்துச் சொல்கிறது. அபராதம் ஏதும் இல்லாமல் அவர் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்க வேண்டுமென வைக்கப்பட்ட கோரிக்கையைக் அய்மான் சமூகநல செயலாளர் பிர்தவ்ஸ் பாஷா தெளிவாக எடுத்துரைத்து கருணையுடன் ஏற்கிறது அமீரக அரசு.
இந்தியத் தூதரகம் தொடர்பு கொண்ட சில மணி நேரங்களிலேயே தாவூதின் சிறைத் தண்டனையை ரத்து செய்து அதற்குண்டான அனுமதிச் சீட்டை வழங்குகிறது அமீரக உள்துறை அமைச்சகம்.
இப்போது சட்டச் சிக்கல்கள் எல்லாம் விலகி தாயகம் செல்லத் தடைகள் அகன்று விட்ட நிலையில் அவருக்கு விமான சீட்டையும் விமானத்தில் பயணிப்பதற்கான கொரோனா பரிசோதனையும் நடத்த வேண்டும்.
மிக மிக முக்கியமான மூன்று பணிகளையும் 24 மணி நேர அவகாசத்திலேயே முடித்து விட்ட பெருமிதத்தில் இந்தியத் தூதரகமே அதற்கான செலவுகளை முன்வந்து ஏற்கிறது
இந்தியத் தூதரகத்தின் உதவியோடு நல்லபடியாக அவரை சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தார்கள் அய்மான் நிர்வாகிகள்
என்றும் அய்மான் சங்கம் இதுபோன்ற சமூக செயல்களை செய்து கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது அதுபோன்று இந்த நபரை ஊருக்கு அனுப்புவதற்காக உழைத்த அபுதாபி அய்மான் நிர்வாகிகள்.
அய்மான் பைத்துல்மால் செயலாளர் நிஜாம் மைதீன்
அய்மான் சமூகநல செயலாளர் பிர்தவ்ஸ் பாஷா
அய்மான் துணைப் பொருளாளர் பசுபதிகோவில் சாதிக் பாஷா
மனிதம் வளர்ப்பதில், மனிதர்களுக்குத் தொண்டு செய்வதில் சிறப்புடன் செயல்பட்டுள்ளனர். ----- நமது செய்தியாளர் காஹிலா


Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us