வளைகுடாவில் தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

வளைகுடாவில் தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சி

ஏப்ரல் 13,2021 

Comments (1)

ஏப்ரல் 10, 2021 சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் அன்னை அகடமி, மேட்டூர் ஜெம்ஸ் பன்னாட்டுப் பள்ளி மற்றும் வளைகுடா தமிழ்ச் சங்கம் இணைந்து வழங்கிய தமிழ்ப் புத்தாண்டு இணையவழி நிகழ்ச்சியில் பேச்சரங்கம், மாறுவேடம் மற்றும் தமிழோடு விளையாடு ஆகிய நிகழ்ச்சிகளில் குழந்தைகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை முனைவர் திருமதி. பாக்கியலட்சுமி வேணு ஒருங்கிணைத்துத் தொகுத்து வழங்கினார். கே. முருகதாஸ் (இயக்குநர் ஜெம்ஸ் பன்னாட்டுப் பள்ளி), வரவேற்புரையாற்றினார். முஹைதீன் சிராஜுதீன் (ஜித்தா தமிழ் சங்கம்,சவுதி அரேபியா ) தலைமை உரையாற்றினார். எஸ்.என். ராஜா (தலைவர், அன்னை அறக்கட்டளை), சிறப்புரையாற்றினார். பேச்சரங்க நிகழ்ச்சியின் நெறியாளராகத் தமிழ்ச்செல்வியும் மாறுவேட நிகழ்ச்சியின் நெறியாளர் எம். மரகத வள்ளியும் சிறப்பாக நிகழ்ச்சியை நடத்தினர். நெறியாளர் முனைவர். புனிதா கணேசன் தலைவர் மற்றும் செயலாளர் பாரத் கல்வி குழுமம் தஞ்சாவூர், சவுதி வாழ் தமிழ் குழந்தைகளுக்குத் தமிழோடு விளையாடு நிகழ்ச்சியினைச் சிறப்பாக நடத்தினார். நகைச்சுவை நிகழ்ச்சியாக, கிருஷ்ணன் பிறிதிடக் குரற்பாங்கினால் அனைவரையும் வசீகரம் செய்தார். இறுதியாக முனைவர் சே. ஆனந்த் தேவ துரையின் (கிங் காலித் பல்கலைக்கழகம் சவுதி அரேபியா) நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது. இதில் வளைகுடா மற்றும் பல்வேறு நாடுகளிலிருந்து தமிழர்கள் ஏராளமானோர் இணையம் வழியாக இணைந்து நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனர். சவுதியின் ரியாத், ஜித்தா, அபஹா, ஜூபைல், அல்கோபார், தமாம் என, பல்வேறு நகரங்களிலிருந்து மாணவர்கள் கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி இதுவேயாகும்.– தினமலர் வாசகர் சிராஜ்

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
Unmai - Thiruthuraipoondi,India
14-ஏப்-202100:41:59 IST Report Abuse
Unmai சித்திரையோ புகுந்தது நித்திரையோ கலைந்தது திருவிழாக்கள் நிறைந்தது தெம்மாங்கு பாடுது தெருக்கூத்து விளையாடுது தமிழர் கலை ஓங்குது தரணியெங்கும் பாடுது பழமையெங்கும் புகுந்தது பண்போடு நிற்கிது அன்போடு புத்தாண்டு தமிழ் பண்போடு வாழ்த்துது அனைவருக்கும் என் இதயம் கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us