ஆஸ்திரேலிய சத்யசாய் பள்ளியில் ஃப்ரண்ட்ஷிப் விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஆஸ்திரேலிய சத்யசாய் பள்ளியில் ஃப்ரண்ட்ஷிப் விழா

ஏப்ரல் 17,2021 

Comments

உலக சத்யசாய் தொண்டு நிறுவனங்களின் ஆஸ்திரேலியா கிளை, நியு சவுத் வேல்ஸ் மாகாணத்தின் வடபுறத்தில், தனியார் பள்ளிகளை நடத்தி வருகிறது. துவக்கப்பள்ளி முர்விலம்பா நகரிலும், மேல்நிலைப்பள்ளி அங்கிருந்து சற்றேறக்குறைய 5 கி.மீ தொலைவில் உள்ள ‘டங்கே’ என்ற பகுதியிலும் உள்ளது. இந்த பள்ளிகள், துவக்க காலத்திலிருந்து, அதாவது 1997 தொடக்கம் இலவச கல்விப்பணியை தொடர்ந்து செய்து வருகிறது. தனியார் பள்ளியாக இருந்தாலும், பள்ளிக் கட்டணம் வாங்குவதில்லை. இந்த உயரிய சேவைக்கு ஆஸ்திரேலிய அரசாங்க உதவியும், ஆஸ்திரேலிய சத்யசாய் உறுப்பினர்களின் அன்பளிப்பும் பெரும் பங்காற்றுகின்றன. ஒன்பது மாணாக்கர்களுடன் துவங்கப்பட்ட இப்பள்ளியில் தற்சமயம் சுமார் 250க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர் பயின்று வருகின்றனர். இந்த ஆண்டு துவங்கப்பட்ட 12-ம் வகுப்புகள், உள்ளூர் மக்களின் நீண்ட கால தேவையைப் பூர்த்தி செய்துள்ளது. தொண்டு நிறுவனமாக செயல்படும் இந்தப் பள்ளிகளின் நிதிப்பற்றாக்குறையை, நல்லுள்ளம் கொண்ட நிர்வாக உறுப்பினர்கள் அவ்வப்பொழுது நிவர்த்தி செய்கிறார்கள்.பள்ளி மற்றும் சார்ந்துள்ள சமுகத்தின் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன், கடந்த மார்ச் 27, சனிக்கிழமையன்று, பள்ளி நிர்வாகமும் ஆஸ்திரேலிய சத்யசாய் நிறுவனமும் இணைந்து, ஃரண்ட்ஷிப் விழாவை துவக்கப்பள்ளி வளகாகத்தில் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சியில் இடம்பெற்ற பல்வேறு வகையான பொழுதுபோக்கு அம்சங்கள் தவிர, பள்ளி மாணவ-மாணவியர் தங்களது கலைத் திறமைகளை இசை மற்றும் விளையாட்டு மூலம் வெளிப்படுத்தினர். தவிர, இலவச மருத்துவ முகாம் மற்றும் உடல்நலம் பேணுதல் குறித்து யோகாப்பியாச பயிற்சிமுறைகளும் இடம்பெற்றன. பள்ளி மாணவ-மாணவியர்களின் ஓவியங்கள் மற்றும் கலைப்படைப்புகள் பல வண்ணங்களாக பார்வைக்கு வைக்கபட்டிருந்தது. காலை சுமார் 10 மணிக்குத் துவங்கி மாலை 3 மணியளவில் நிறைவு பெற்ற இந்நிகழ்ச்சியில், சற்றேறக்குறைய 800 பேர் பங்கெடுத்தனர். விழாவில் பல்லின சைவ உணவு வகைகளும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்விழா, உள்ளூரிலிருந்து பெற்றோர்-நண்பர்கள் சங்கம் மூலமாக பெற்றோர்கள், உள்ளூர்வாசிகள் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள்-அலுவர்கள் உதவியுடனும், சத்யசாய் நிறுவனத்தின் பிரிஸ்பேன், தூவூம்பா மற்றும் சிட்னி பெருநகர தன்னார்வலர்களின் ஆதரவுடனும் மிகச்சிறப்பாக நடைபெற்றது., கீழ்கண்ட வரிகள், நிகழ்ச்சித் தயாரிப்பில் பங்கெடுத்த பள்ளி மாணாக்கர் ஒருவரின் தந்தையின் மின்அஞ்சலிலிருந்து எடுக்கப்பட்டது. இது அவரது பின்னூட்டல. நிகழ்ச்சியின் வெற்றிக்கு இவ்வரிகளே சான்று.
‘’மிகுந்த உற்சாகத்துடனும், ஆரவாரத்துடனும் பங்கெடுத்து, நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்த இவ்வேளையில், எனது பாராட்டையும், நன்றியையும் தெரிவிக்க கடைமைப்பட்டிருக்கிறேன் என்ற காரணத்தால், இம் மின்அஞ்சல் செய்கிறேன். வைரம் போல் மிளிர்கின்ற இப்பள்ளியும், பள்ளியின் நிர்வாகமும், இந்த சமுதாயத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் என்பதை இந்த சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்த ஃப்ரண்ட்ஷிப் விழா மிக இன்றியமையாததாக அமைந்தது என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இந்த நிகழ்ச்சித் தயாரிப்பில் நான் பங்கெடுத்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைவதுடன், இனிவரும் நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பதில் சற்றும் தயங்கமாட்டேன். இந்தப் பள்ளிக்கு, நீங்கள் அளிக்கும் ஊக்கம், உடலயறாத உழைப்பு மற்றும் உங்களது அர்பணிப்பு எம்மை மிகவும் பிரமிக்க வைக்கிறது. உங்களுக்கு எமது தலையாய நன்றிகள்!
இப்பள்ளியைப் பற்றி மேலதிக விபரங்களை கீழ்க்கண்ட இணையதளத்தில் காணலாம்.
https://sathyasaicollege.nsw.edu.au/- நமது செய்தியாளர் ஆ.சோ.ரெங்கநாதன்

Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement

தற்போதைய செய்தி

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.