சிங்கப்பூர் ஸ்ரீ ராமர் ஆலயத்தில் ஸ்ரீ ராமநவமி விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூர் ஸ்ரீ ராமர் ஆலயத்தில் ஸ்ரீ ராமநவமி விழா

ஏப்ரல் 22,2021 

Comments

சிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் ஏப்ரல் 21 ஆம் தேதி ஸ்ரீ ராம நவமி மஹோற்சவம் வெகு விமரிசையாகத் துவங்கியது. ஸ்ரீ ராமர் என்றால் சாங்கி ஆலயம் – ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் என்றால் சிராங்கூன் சாலை ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயம் – மகா மாரியம்மன் என்றால் சவுத் பிரிட்ஜ் சாலை அருள்மிகு மாரியம்மன் ஆலயம்.சிவன் என்றால் கேலாங் கிழக்கு ஸ்ரீ சிவன் ஆலயம் – முருகன் என்றால் குளக்கரைச் சாலை அருள்மிகு தெண்டாயுதபாணி ஆலயம் – பிள்ளையார் எனில் லயன் சித்தி விநாயகர் ஆலயம் என சிங்கப்பூரில் சகலவித தெய்வங்களும் எழுந்தருளி அருள்பாலித்து வருவது சிங்கப்பூர்த் தமிழர்களை ஆன்மிக வெள்ளத்தில் ஆழ்த்தி வரும் செய்தியாகும். சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் சாங்கி கிராமத்திலுள்ளவர்கள் ஒரு அரச மரத்தடியில் ஸ்ரீ ராமர் படத்தை வைத்து பண்டாரத்தைக் கொண்டு வழிபாடு நடத்திய இடம் இன்று சகலவித தெய்வங்களும் எழுந்தருளி அருள்பாலித்து வரும் புனித சேத்திரமாக விமானங்களும் தலைகுணிந்து செல்லும் தலமாக - ஸ்ரீ சீதா லட்சுமண சமேத ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியும் 21 அடி உயரமுள்ள ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேய சுவாமியும் அருள்பாலித்திட விளங்கி வருகிறது.

ஸ்ரீ ராமர் ஆலயத்தில் ஏப்ரல் 21 ஆம் தேதி ஸ்ரீ ராம நவமி மஹோற்சவம் கோலாகலமாகத் தொடங்கியது. மேத் திங்கள் 2 ஆம் தேதி வரை நடைபெறும். இவ்வுற்சவத்தில் நாள்தோறும் வைகானஸ யஷோ பூஷணம் அம்மன்குடி வெ.ஸ்ரீநிவாச பட்டாச்சார்யார் தலைமையில் காலை பஞ்ச சூக்த ஹோமம் – மூல மந்திர ஹோமம் – விசேஷ திருமஞ்சனம் நடைபெறும். மாலையில் உற்சவர் சர்வ அலங்கார நாயகராக விசேஷ அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பார். இன்றைய சூழல் கருதி சுவாமி புறப்பாடு மட்டும் தவிர்க்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 24 ஆம் தேதி சந்தணக் காப்பு அலங்காரம் நடைபெறும். மே முதல் தேதி திருக்கல்யாண மஹோற்சவத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சகஸ்ரநாம அர்ச்சனையும் உண்டு. நிறைவு நாளாள மே 2 ஆம் தேதி விடையாற்றி உற்சவத்தன்று புஷ்ப யாகமும் – ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு வடை மாலை அர்ச்சனையும் நடைபெறும்.

ஸ்ரீ ராம நவமி நன்னாளில் வைகறையிலிருந்தே பக்தர்கள் திரளாக வருகை புரிந்ததால் – ஆலய நிர்வாகம் சமூக இடைவெளி விட்டு – முகக் கவசமணிந்த பக்தர்களை அணி அணியாக நுழை வாயில் ஒருபுறமும் வெளியேறும் வழி மறுபுறமுமாக ஒழுங்குபடுத்தி பக்தர்கள் வசதியாக தரிசனம் செய்ய சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. ஆயிரக் கணக்கானோர் இரவு வரை வருகை புரிந்து தரிசனம் செய்து ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி அருள்பெற்றுச் சென்றனர். பக்தப் பெருமக்கள் நவமி மஹோற்சவம் முழுவதும் பங்கேற்று அருள் பெற்றுய்யுமாறு ஆலய நிர்வாகமும் அர்ச்சகர் குழுவும் விரும்பி அழைக்கிறது.

-நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜூன் 25- 27 ல் காலத்தை வென்ற கவியரசரின் கவிதை திருவிழா 2021

ஜூன் 25- 27 ல் காலத்தை வென்ற கவியரசரின் கவிதை திருவிழா 2021...

ஜூலை 3ல் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் விளையாட்டுப் போட்டிகள்

ஜூலை 3ல் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் விளையாட்டுப் போட்டிகள்...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us