சிங்கப்பூர் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயத்தில் ஸ்ரீ ராம நவமி மஹோற்சவ கோலாகலம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூர் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயத்தில் ஸ்ரீ ராம நவமி மஹோற்சவ கோலாகலம்

ஏப்ரல் 25,2021 

Comments

தென் கிழக்கு ஆசியாவின் திருப்பதி என பக்தப் பெருமக்களால் போற்றி வழிபடும் சிங்கப்பூர் சிராங்கூன் சாலை ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயத்தில் ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் ஸ்ரீ ராம நவமி மஹோற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. நாள்தோறும் தலைமை அர்ச்சகர் ப்ரவசனப் ப்ரவீணா எஸ்.கே.வாசுதேவ பட்டாச்சார்யாரின் உபந்யாசம் – ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் ஜனனம் முதல் பட்டாபிஷேகம் வரை ஒன்பது நாட்கள் நடைபெறவிருக்கின்றன..ஒன்பது நாட்களும் நாட்டியக் கலை விழா சிங்கப்பூரின் பிரபல நாட்டியாலயா நடனமணிகளைக் கொண்டு நடைபெற்று வருகின்றது.. கலச ஸ்தாபணம் செய்து வைகறையில் ஸ்ரீ வால்மீகி ராமாயணப் பாராயணம் நடைபெறுகிறது. மூலவருக்கு விசேஷ திருமஞ்சணம் – அலங்காரம் – ஆராதனை கண்கொள்ளாக் காட்சி. நாள்தோறும் ஸ்ரீ பூதேவி – ஸ்ரீதேவி சமேத ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் சர்வ அலங்கார நாயகராக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். இன்றைய சூழல் கருதி பக்தர்கள் முகக் கவசமணிந்து தனிமனித இடைவெளி விட்டே அனுமதிக்கப்படுகின்றனர். ஓம்கார் ஆர்ட்ஸ் – சித்ரா சங்கரின் சித்ர கலா ஆர்ட்ஸ் – பொன்னம்மா தேவய்யா குழுவினர் – காயத்ரி ஸ்ரீராமின் ஸ்ருதிலயா குழுவினர் என ஒன்பது நாட்களும் நாட்டியக் கலை விழா அற்புதமாகக் கலை விருந்து படைத்து வருகின்றனர். பக்தப் பெருமக்கள் அருட்செல்வத்தையும் கலைச் செல்வத்தையும் ஒருங்கே அனுபவித்து வருகின்றனர். ஆலய நிர்வாகம் தரிசனத்திற்கும் கலை விழாவில் கலந்து கொள்ளுவதற்கும் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
– நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜூன் 19, ஜூலை 3ல் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் விளையாட்டுப் போட்டிகள்

ஜூன் 19, ஜூலை 3ல் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் விளையாட்டுப் போட்டிகள்...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us