இணையவழியில் விவேக்கிற்கு நினைவேந்தல் நிகழ்ச்சி | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

இணையவழியில் விவேக்கிற்கு நினைவேந்தல் நிகழ்ச்சி

ஏப்ரல் 25,2021 

Comments

உலகளாவிய இளந்தமிழர் குழு சார்பில் நடந்த நடிகர் மற்றும் சமூக ஆர்வலரான பத்மஸ்ரீ விவேக் அவர்களை நினைவு கூறும் வகையில் நிகழ்ச்சி நடந்தது. இந்த குழுவின் தலைவராகவும் ஆலோசகருமான ஆய்வாளர் வரலாற்றாளர் அறிவியலாளர் என்று பன்முகம் கொண்ட திரு ஒரிசா பாலு ஐயா அவர்கள் தலைமை தாங்க நிகழ்ச்சி இனிதே நடந்தது. இணைய வழியில் நடந்த இந்த நிகழ்வில் கொரியா, துபாய், ஆஸ்திரேலியா, ஹாங்காங் போன்ற பல நாடுகளில் இருந்து பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டு நடிகர் விவேக் அவர்களை பற்றி தாங்கள் அறிந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.
பாக்யலக்ஷ்மி நடிகர் விவேக் அவர்கள் பியானோ வாசித்து பதிவு செய்யப்பட்ட பாடலை பாடி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இளம் வரலாற்று ஆய்வாளர்களான நந்த பாலனும் பொன்னிவளவன் விவேக் அவர்களை படம் வரைந்து அதன் மூலமாக அஞ்சலி செலுத்தினர். பொன்னிவளவன் மற்றும் சர்வேஷ் விவேக் அவர்களைப் பற்றியும் மரம் நடுதல் பற்றியும் கவிதைகளை எழுதி அவருக்கு நினைவு அஞ்சலி செலுத்தினார்கள்.
மாணவி ரக்ஷிதா அவர்கள் விவேக் அவர்களின் நினைவாக தன் வீட்டில் வாழை மரத்தை நட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தியதை பற்றி கூறியதுடன் அவர் வாழும் பகுதியில் மரம் நடும் செயல்களில் தான் ஈடுபட்டு இருப்பதை பற்றி எடுத்துச் சொன்னார். கொரியாவில் இருந்து மாணவர் கவின், தான் ரசித்த விவேக் அவர்களின் நகைச்சுவையை பகிர்ந்து கொண்டார். மோகனப்பிரியா, சிவதர்ஷினி பாடல்களைப் பாடி இந்த நிகழ்ச்சியை மேலும் மெருகூட்டினர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக டார்வின் கண்ணா இருந்து இந்த நிகழ்வை சிறப்பாக நடத்தி வைத்தார். இறுதியில் ஒரிசா பாலு ஐயா ஒவ்வொரு பங்கேற்பாளர்கள் அவர்கள் வீட்டில் ஒரு சிறு மூலிகைச் செடியை வைத்து சமூக ஆர்வலர் விவேக் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துமாறு கூறினார்.
– நமது செய்தியாளர் சித்ரா சிவக்குமார்

Advertisement
மேலும் ஜப்பான்/சீனா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜூன் 5 ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் குருமகான் அருளுரை

ஜூன் 5 ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் குருமகான் அருளுரை...

மே 27 முதல் 29 வரை இலங்கையில் மகா சக்தி யோகம்

மே 27 முதல் 29 வரை இலங்கையில் மகா சக்தி யோகம்...

மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி

மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...

மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி

மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us