ஆக்லாந்தில் ஸ்ரீராம நவமி விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஆக்லாந்தில் ஸ்ரீராம நவமி விழா

ஏப்ரல் 28,2021 

Comments

ஆக்லாந்தில் பஜன் சத்சங்க அமைப்பினர் ஸ்ரீராம  நவமியை முன்னிட்டு  சென்ற வெள்ளி மாலை முதல் ஞாயிறு மதியம் வரை கோடி முறை விஷ்ணு  நாமம் ஜபிப்பதற்கு  ஏற்பாடு செய்திருந்தார்கள். மிக சிறப்பான  முறையில் இந்த பாராயணம் ஒனேஹங்காவில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலில் மிக நேர்த்தியாக நடந்தேறியது. மூன்று நாட்களும் ஏறக்குறைய 300 முதல் 400 பக்தர்கள் கலந்து கொண்டு  சஹஸ்ரநாமம் பாராயணம் செய்தனர். 


வெள்ளியன்று மாலை 6.30 மணியளவில்  ஸ்ரீ கணேச  பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டது.  இரவு 9.30 வரை நடத்தப்பட்டு, மீண்டும் மறுநாள் சனியன்று காலை 6.30 மணிக்கு தொடங்கியது. ராம அவதாரம் என்பது இந்த உலகில் உள்ள ஒவ்வொரு சராசரி மனிதனுக்கும்  தர்மத்தையும், சில நீதிகளையும் குறிக்கோள்களையும் எடுத்துக்காட்டும் ஒரு உயர்ந்த அவதாரமாகும். அந்த மாபெரும் அவதாரத்தை முன்னிட்டு கொண்டாடும்  ஸ்ரீ ராமநவமியை சிறப்பிக்கும் வகையில்  ஸ்ரீ ராமர், சீதா, லக்ஷ்மணன் மற்றும் ஹனுமனுக்கு 24 வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. மாலை 6 மணிக்கு சனி பிரதோஷமும் சிறப்பாக நடத்தப்பட்டது.


ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு உஞ்சவ்ருத்தியுடன் ஆரம்பிக்கப்பட்டது.  பிறகு நாம பாராயணம் நடந்தது. அதை தொடர்ந்து சீதா கல்யாணம் வைபோகம் சிறப்பாக ஸ்ரீ சந்துரு குருக்களால் நடத்தப்பட்டது.  சுமார் 400 பக்தர்கள்  சஹஸ்ரநாமம் கூறுவதன்  மூலமாக  கோடி முறை நாமங்களை  ஜபித்து  இவ்வைபவம் உலக நன்மைக்காக நடத்தப்பட்டது . 


நிகழ்ச்சியின்  இறுதியில் பஜன் சங்க தலைவர் ஸ்ரீ வெங்கடாச்சலம் இந்த மாபெரும் வைபவத்தில் கலந்து கொண்ட  அனைவருக்கும் நன்றி கூறினார்.  இந்நிகழ்ச்சி இவ்வளவு சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்திய  ஸ்ரீ வெங்கடாச்சலம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீமதி கவிதா ஆகியோரை அனைவரும் பாராட்டினார்கள். பக்தர்கள் அனைவருக்கும் மூன்று நாட்களும் மஹாப்ரசாதம் வழங்கப்பட்டது.


– நமது செய்தியாளர் சந்திரா சங்கரன் Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)...

செப்., 27 ல் கல்லூரிப் பயணம்: நியூ செர்சி தமிழ்ப் பேரவையின் 'அறிவரங்கம்' நிகழ்ச்சி

செப்., 27 ல் கல்லூரிப் பயணம்: நியூ செர்சி தமிழ்ப் பேரவையின் 'அறிவரங்கம்' நிகழ்ச்சி...

அக்., 2 ல் 'தமிழ் அறிஞர்கள் நாள்' விழா

அக்., 2 ல் 'தமிழ் அறிஞர்கள் நாள்' விழா...

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us