இணைய வழியில் நடந்த தமிழ்நாடு அறக்கட்டளை ஹூஸ்டன் கிளையின் குழந்தைகள் தின நிகழ்ச்சி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

இணைய வழியில் நடந்த தமிழ்நாடு அறக்கட்டளை ஹூஸ்டன் கிளையின் குழந்தைகள் தின நிகழ்ச்சி

ஏப்ரல் 28,2021 

Comments

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறக்கட்டளை - ஹூஸ்டன் கிளை, இணையம் வழியாக விழா ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. இந்த விழாவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கு கொள்ள பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுமார் நான்கு மணி நேரம் தங்கு தடை இன்றி ஒன்றன் பின் ஒன்றாக நிகழ்ச்சிகள் வந்த வண்ணம் இருந்தன. இந்த கிளையின் சார்பாக, "வர்ண ஜாலம்" சிறார்கள் வண்ணம் தீட்டும் போட்டி, "ஆடல் அரங்கம்" நடனப்போட்டி, "இசையருவி" பாட்டு போட்டி, மற்றும்பெரியவர்களுக்கு கோலப்போட்டியும், கருத்தரங்கமும் நடத்தப்பட்டன. வயது வாரியாக (8-13; 14-18) நடத்தப்பட்ட இசையருவி போட்டியின் வெற்றியாளர்களை சூப்பர் சிங்கர் மூக்குத்தி முருகன் அவர்கள் தேர்ந்தெடுத்தார்.
நிகழ்ச்சியின் துவக்கத்தில் ஹூஸ்டன் கிளையின் தலைவி திருமதி மாலா கோபால் அனைவரையும் வரவேற்று, தமிழ்நாடு அறக்கட்டளையின் துவக்கம் மற்றும் குறிக்கோள்களை விவரித்தார். இவரை தொடர்ந்து செயலாளர் டாக்டர் நளினி பாலச்சந்திரன் ஹூஸ்டன் கிளையின் தனித்துவம், சிறப்பு அம்சங்கள், ஆகியவற்றை விளக்கினார். காசாளர் திருமதி புனிதா தங்கராஜ் அவர்கள் கிளையின் வரவு செலவு மற்றும் நன்கொடை மூலம் சேரும் நிதியை பற்றி விவரித்தார். இந்த குழந்தைகள் தின நிகழ்ச்சியை ஒரு நிதி திரட்டும் விழாவாக ஏற்பாடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜூம் செயலியின் மூலமாக ஐம்பதிற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இணையம் வழியாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக "2021ஆம் ஆண்டு எப்படி இருக்கும்" என்ற கருத்தரங்கம் அனைவரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது.
– தினமலர் வாசகர் தியாகராஜன்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜூன் 25- 27 ல் காலத்தை வென்ற கவியரசரின் கவிதை திருவிழா 2021

ஜூன் 25- 27 ல் காலத்தை வென்ற கவியரசரின் கவிதை திருவிழா 2021...

ஜூலை 3ல் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் விளையாட்டுப் போட்டிகள்

ஜூலை 3ல் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் விளையாட்டுப் போட்டிகள்...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us