டொரன்டோ தமிழ் இருக்கைக்கு தேவையான நிதி திரட்டப்பட்டது | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

டொரன்டோ தமிழ் இருக்கைக்கு தேவையான நிதி திரட்டப்பட்டது

ஏப்ரல் 28,2021 

Comments (1)

டொரன்டோ : டொரன்டோ தமிழ் இருக்கைச் செயல் திட்டத்தைச் செயல் படுத்துவதற்கான 3,000,000 டாலர் என்ற குறிக்கோள் தொகையை எட்டிவிட்டோம் என கனடியத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. டொரன்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக கடந்த சில மாதங்களாக இணையம் வழியாக நிதி திரட்டப்பட்டு வந்தது.
2018 ம் ஆண்டு மே மாதம், கனடாவில் முதலாவது தமிழ் இருக்கையை நிறுவுவதற்காக, கனடியத் தமிழர் பேரவையும், தமிழ் இருக்கை அமைப்பும் இணைந்து, டொரன்டோ பல்கலைக்கழகத்தோடு ஓர் உடன்படிக்கையை மேற்கொண்டது. கோவிட்-19 என்ற உலகளாவிய பெருந்தொற்றால் துவண்டுவிடாது, தமிழ் சமூகமும், ஆர்வலர்களும் இணைந்து கனடிய மண்ணிலே வரலாற்று அருஞ்செயலை ஆற்றியுள்ளார்கள்.
கனடியத் தமிழர் பேரவை, அனைத்து கொடையாளருக்கும், சமூக அமைப்புகளுக்கும், ஊர்ச்சங்கங்களுக்கும், பழைய மாணவர் சங்கங்களுக்கும், கலைஞர்களுக்கும், சமூக ஊடகங்களுக்கும், அனைத்து நாடுகளிலிருந்தும் ஆதரவு வழங்கிய நல்உள்ளங்களுக்கும் உள்ளார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது. குறிப்பாக, இச்செயல் திட்டத்தை நிறைவேற்ற உதவிய தமிழக அரசின் ஆதரவுக்கும் நன்றியைத் தெரிவிக்கின்றது.

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
Manian - Chennai,Iran
29-ஏப்-202105:33:43 IST Report Abuse
Manian இதில் வன்னியர்களே பேராசிரியர்களாக நியமிக்க படவேண்டும் . இல்லையேல் கனடா வந்து போராடுவேன் டாக்டரு ராமதாசு
Rate this:
0 members
1 members
1 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us