பிரிஸ்பேனில் சித்திரை புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பிரிஸ்பேனில் சித்திரை புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி

மே 04,2021 

Comments

பிரிஸ்பேனின் வர்ணம் கலைக்குழு ஏற்பாடு செய்திருந்த தமிழ் மற்றும் ஏனைய இந்திய புத்தாண்டு விழா நிகழ்ச்சி, கடந்த ஏப்ரல் 17 சனிக்கிழமை மாலை பிரிஸ்பேனின் புறநகர்ப் பகுதியான ஸ்பிரிங்ஃபீல்ட் லேக்ஸ் ரொபெல்லா டொமைன்ஸ்-ல் மிகச் சிறப்பாக நடந்தேறியது. தமிழ்ப் புத்தாண்டு தவிர கேரளாவின் விசு (கேரளா), யுகாதி (ஆந்திரா,தெலுங்கானா, கர்நாடகா), குடிபடுவா (மகாராட்டிரம்), பிகு (அசாம்), பைசாகி (பஞ்சாப்), விசுவ/பன சங்கராந்தி (ஒடிசா), நப பர்சா(வங்காளம்) புத்தாண்டுகளையும் சேர்த்து கொண்டாடப்பட்டது. மேற்சொன்னது தவிர இமாச்சலம், மணிப்புரி, நேபாளம், சிங்களம், மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பர்மா, தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகளிலும்/நாடுகளிலும், ஏப்ரல் மத்தியில் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய பாரம்பரிய முறையில் துதிப்பாடல்களைத் தொடர்ந்து நடனத்தில் புஷ்பாஞ்சலியும், நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்களின் ‘குத்துவிளக்கேற்றலும்’ நிகழ்ச்சியைத் துவங்கி வைத்தன. நிகழ்ச்சியில் இடம் பெற்ற பரதநாட்டியம், பல்லின கலை நடனங்கள், தென்/வட இந்திய திரை இசைக்கு நடனம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பிரிஸ்பேன் மற்றும் இப்சுவிச் நகரவாசிகள் பங்கெடுத்து தமது திறமைகளை வெளிப்படுத்தினர். வர்ணம் கலைக்குழுவின் இந்த ஆண்டுக்கான ”சமூக சேவகர்” விருது, சுரேந்திர பிரசாத்திற்கும், வளரும் கலைஞருக்கான விருது, கடந்த இரண்டாடுகளாக இப்சுவிச் நகர பகுதிகளில் மரம் நடுவிழாவை ஏற்பாடு செய்த ஶ்ரீமதி நாராயணனுக்கும், பல ஆண்டுகளாக வர்ணம் கலை நிகழ்ச்சிகளை திறம்பட ஏற்பாடு செய்து நடத்தி வருகிற சேவைக்கான விருது திருமதி ஸ்வப்னா இராஜராஜனுக்கும், ஐயப்பன் காளிதாசுக்கும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த முக்கிய பிரமுகர்களில் மத்திய-மாநில அமைச்சர்கள், மேலவை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரிஸ்பேன் இந்திய அரசின் கௌரவ தூதர் திருமதி. அர்ச்சனாசிங், மற்றும் இந்திய வம்சாவளி முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொழில் நிபுணர்களும் அடங்கும்.
வர்ணம் கலைக்குழுவின் தலைவர் இராஜராஜன் தென்னவன் தனது உரையில் மக்களின் சமூக அமைதிக்கு, பல்லின மக்களின் சமுதாய ஒற்றுமையும், இணக்கமும் மிக இன்றியமையாதது என்றும், வர்ணம் கலைக்குழு அதற்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறது என்றும், அதற்கு பலவழிகளில் ஆதரவு செய்துவருகிற குயின்ஸ்லாந்து அரசு, இப்சுவிச் நகர் மன்றம், அரசியல் பிரமுகர்கள், தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள், மற்றும் ஏனைய சமூக அமைப்புகளுக்கும் நன்றி தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து பொருளாளர் செந்தில், நிகழ்ச்சியைத் திறம்பட நடத்த உதவியை நடத்த உதவிய அணைவருக்கும் நன்றி தெரிவித்ததுடன் வரும் ஆண்டில் மிகப்பிரம்மாண்டமாக நடத்த எண்ணியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் பலவித கேளிக்கை நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்காக விளையாட்டு வசதிகள் மற்றும் பல்லின உணவுவகைகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வானவேடிக்கைகளுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது. – நமது செய்தியாளர் ஆ.சோ.ரெங்கநாதன்

Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜன.23 ல் சிறப்பு பன்னாட்டு பட்டிமன்றம்

ஜன.23 ல் சிறப்பு பன்னாட்டு பட்டிமன்றம்...

சிங்கப்பூரில் ஜன., 4 முதல் 14 வரை வைகுண்ட ஏகாதசி மஹோற்சவம்

சிங்கப்பூரில் ஜன., 4 முதல் 14 வரை வைகுண்ட ஏகாதசி மஹோற்சவம்...

நியூசெர்சி தமிழ்ப் பேரவை புதி நிர்வாகிகள்- 2022

நியூசெர்சி தமிழ்ப் பேரவை புதி நிர்வாகிகள்- 2022 ...

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us