சிங்கப்பூர் ஆலயத்தில் புஷ்ப யாகம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூர் ஆலயத்தில் புஷ்ப யாகம்

மே 05,2021 

Comments

சிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் மேத் திங்கள் 2 ஆம் தேதி வரை ஸ்ரீ ராம நவமி மஹோற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மே 2 ஆம் தேதி விடையாற்றி உற்சவமும் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீ சீதா சமேத ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்திக்கு புஷ்ப யாகம் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. உற்சவக் காலத்தில் அர்ச்சகர்கள் – அதிகாரிகள் – பக்தர்கள் தங்களை அறிந்தோ அறியாமலோ இழைக்கின்ற தவறுகளுக்குப் பரிகாரம் காணவே புஷ்ப யாகம் செய்யப்படுவது மரபு. இம்மரபைப் பின்பற்றி இவ்வாலயத்திலும் வைகானஸ யஷோ பூஷணம் அம்மன்குடி வெ.ஸ்ரீநிவாச பட்டாச்சார்யார் தலைமையில் மணம் கமழும் மலர்களால் புஷ்ப யாகம் இயற்றப்பட்டது. சிங்கப்பூரிலேயே மிக உயரமாக அமைந்துள்ள ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேய சுவாமிக்கு வடை மாலையும் சமர்ப்பிக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது. பக்தப் பெருமக்கள் பெருமளவில் மனமுவந்து மலர்களைச் சமர்ப்பித்தனர். இத்துடன் ஸ்ரீ ராம நவமி மஹோற்சவம் நிறைவு கண்டது. ஆலய நிர்வாகம் மிகச் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
– நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us