கான்பெராவில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

கான்பெராவில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்

மே 05,2021 

Comments

கான்பெராவில் உள்ள ஆஸ்திரேலிய தமிழ் கலாச்சார சமூக உறுப்பினர்களால் ஏப்ரல் 24 ம் தேதி டெய்லர் பள்ளியில் பிலவ தமிழ் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தமிழ் குடும்பங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். புதிதாக அமைக்கப்பட்ட பள்ளியில் ஆஸ்திரேலிய தமிழ் கலாச்சார சமூகத்தினரால் மிகச் சிறப்பாக திட்டமிடப்பட்டு, நேர்த்தியான முறையில் இவ்விழா நடைபெற்றது. இந்த இக்கட்டான சூழலில் அனைவரும் பாதுகாப்பான முறையில் வந்து செல்வதற்கு ஏற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இவ்விழாவினை ஏடிசிஎஸ் செயல் குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக ஆஸ்திரேலியாவிற்கான பொறுப்பு இந்திய தூதர் பி.எஸ்.கார்த்திகேயன் கலந்து கொண்டார். அவரது தனது உரையில், இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான நல்லுறவை மேம்படுத்த இது போன்ற விழாக்களை தொடர்ந்து நடத்த வேண்டும் என கழக உறுப்பினர்களை அவர் கேட்டுக் கொண்டார். கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு 150 க்கும் மேற்பட்டோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர். பலர் மேடை நிகழ்ச்சியிலும் பங்கேற்றனர்.
பரதநாட்டியம் முதல் சினிமா பாடல்கள் வரை அனைத்தும் விழாவில் இடம்பெற்றன. ஆடல், பாடல், இசைக் கருவிகள் இசைத்தல் என பல விதமாக கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பார்வையாளர்களை இருக்கையை விட்டு நகர முடியாத அளவிற்கு கலைநிகழ்ச்சிகள் அவர்களை மாலை வரை கட்டிப் போட்டன. பரதநாட்டியம், கதக், மோகினியாட்டம், சினிமா பாணி நடனங்கள் என பலவற்றின் கலவையாக இந்நிகழ்ச்சி அமைந்தது. விழாவை தொடர்ந்து கலந்து கொண்ட அனைவருக்கும் தென்னிந்திய முறையிலான இரவு உணவு வழங்கப்பட்டது. தமிழ் புத்தாண்டு விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்ய கழக உறுப்பினர்களை அனைவரும் பாராட்டினர்.
– நமது செய்தியாளர் கோவிந்தராஜ்

Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us