உழைப்பாளர் தின சிறப்பு பன்னாட்டு பட்டிமன்றம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

உழைப்பாளர் தின சிறப்பு பன்னாட்டு பட்டிமன்றம்

மே 05,2021 

Comments

தொழிலாளர் தினம் சிறப்பாக கொண்டாடப்படும் மே முதல் தேதியன்று உலகமுழுதும் சிறப்புற ஆத்மார்த்தமாக கொண்டாடப்பட்ட நேரத்தினில் பன்னாட்டு பட்டிமன்றம் மூலம் தமேரிக்கா தொலைக்காட்சியும் தில்லி கலை இலக்கியப்பேரவையும் பஹ்ரைன் செந்தமிழ் சொல்வேந்தர் மன்றமும் இணைந்து மிகச்சிறப்பாக பல்லாயிரக்கணக்கானோரை இணையவழியே ஒன்று திரட்டி வெகு சிறப்பானதொரு நிகழ்வினை வழங்கி உலகெங்கிலும் உள்ள தமிழ் பேசும் அன்புள்ளங்கள் மனதினில் பால் வார்த்தனர் என்பது ஒரு மகிழ்வான செய்தி. வாழ்வை நடத்தி செல்வது விதியா...? மதியா...? நிதியா.. ? எனும் தலைப்பினில் ஒன்பது பேச்சாளர்கள் உலகெங்கிலும் இருந்து எட்டு நாடுகளில் இருந்து பங்கேற்க, நடுவர் தொலைகாட்சி வழி பிரபலமான புலவர் . மா.ராமலிங்கம் அய்யா என்பதே மிகப்பெரும் எதிர்ப்பார்ப்புக்குரியதாக இருந்தது.
நிகழ்வின் துவக்கத்திலேயே மகேஷ் நாட்டாண்மை முதலில், கொரோனாவிலே இறந்த பல்லாயிரம் உயிர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கும் வண்ணம் ஒரு நிமிடம் நிகழ்வு நடத்துனார் மற்றும் பார்வையாளர்களும் அமைதி அஞ்சலி செலுத்தினர்.பின்னர் நெறியாளர் திருமதி.மைதிலி கிருஷ்ணன் பொறுப்பேற்றுக்கொண்டு நிகழ்வினை தொகுத்து வழங்க முதலில் திரைப்பட பாடகர் செல்வன் ரா.சி.ரக்தாஸ் இறைவணக்கத்துடன் துவங்கி, தொடர்ந்து புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு..எனும் பாடலையும் இனிமையாக பாடினார். அடுத்து கோவை ஆழ்வார் ஸ்ரீநிதி எனும் சிறிய எட்டுவயது குழந்தை மிக அழகாக ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி சிறப்பு வைபவ பகல்பத்து ராப்பத்து சரித்திரத்தினை மிகச்சுருக்கமாக உபன்யாசமாக கூறி பார்வையாளர்களின் மனதை கொள்ளை அடித்தார்.. அடுத்து வரவேற்புரையினை பஹ்ரைன் சார்ந்த பொன் சங்கர பாண்டியன் வழங்க, அறிமுக உரையினை பாலசிங்கம் பிரபாகரன் வழங்கிட, உழைப்பாளர் தின சாதனையாளர்கள் விருதுகள் நகைச்சுவை நாவரசர் மா.ராமலிங்கம், நகைச்சுவை மாமணி விருது நடிகர் /இயக்குனர் ரமேஷ் கண்ணாவுக்கும் மற்றும் கணேசன் ஹரி நாராயணன், பாரதி சுகுமாரன், உதயம் ராம், கண்ணன், உதயசந்திரன், இளங்கோவன் சுகுமாறன், சிவக்குமார், எஸ்.எஸ்.இஸ்மாயில், விஜய் அய்யர், முரளி ராஜன், முஹம்மது அர்ஷத் சுகேல் ஆகியோருக்கு வழங்கப்பட்டது .
நிகழ்வின் சிறப்பு விருந்தினர் ரமேஷ் கண்ணா, தனது திரைப்பட அனுபவங்களுடன் இலக்கியத்தின் மீதான பட்டிமன்றங்களின் மீதான வாசிப்பு பழக்கம் தொடர்புடைய செய்திகளுடன் சுவைபட சிறப்புரையாற்றிட, கவுரவ விருந்தினர் இளங்கோவன் சுகுமாரன் தலைவர்.பாரதி சுகுமாரன் ஆகியோரின் உரைகளுக்கு பிறகு துவங்கிய நிகழ்வு பட்டிமன்ற நடுவர் மா.ராமலிங்கம் கைகளில் கொடுக்கப்பட்ட பிறகு சூடுபிடித்து விரைவானது. நகைச்சுவை கலந்த கலகலப்பான உரையினில் துவக்க உரை ஆற்றி பேச்சாளர்களை அறிமுகப்படுத்தி விதியே எனும் தலைப்பினில் - மலேஷியா த.மஹாதேவன் , துபாய் ஜெசீலா பானு, லண்டன் கலா திருநாவுக்கரசு ஆகியோரையும் மதியே எனும் தலைப்பினில் அமெரிக்கா சுதாராணி ராமலிங்கம், பஹ்ரைன் சி.பாலசுப்பிரமணியன், திருச்செங்கோடு. கவிதா ராஜசேகர் ஆகியோரையும், நிதியே எனும் தலைப்பினில் விருத்தாசலம் அருண், ஓமன் தருமாம்பாள் சீனிவாசன், ஜப்பான் அசோக் ஆகியோரையும் சுழல் முறையினால் அழைத்து வாதிட வைத்தார்கள்.
பேச்சாளர்கள் அனைவரும் அவரவருக்கே உரித்தான பாணியில் மிகச்சிறப்பாக வாதங்களை பிரதிவாதங்களை நகைச்சுவை ததும்ப, கதைகளுடன், பாடல்களுடன், இலக்கியத்தில் உள்ள எடுத்துக்காட்டுகளுடன், நடைமுறை உண்மைகளுடன், சொந்த அனுபவங்களையும் இணைத்து சுவைபட சிறப்புற வாதிட்டனர். இதில் மிகவும் குறிப்பிட வேண்டிய ஒரு விஷயம் சிறப்பு விருந்தினர் ரமேஷ் கண்ணாவும், தனது பேச்சினில் குறிப்பிட்டது போல அவர் ஒரு ராமலிங்கம் அய்யாவின் பேச்சுக்களின் ரசிகர் என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் அத்துணை பேருடைய பேச்சுக்களையும் ரசித்துப் பார்த்து நிகழ்வின் இறுதிவரையில் இருந்து ரசனை உணர்வுடன் மகிழ்வுடன் கைதட்டி மகிழ்ந்தார்கள் . அவர் ஒரு கலைஞர் என்பதையும் தாண்டி கலாரசிகர் என நிரூபித்தார். முடிவுரையில் ராமலிங்கம், பலவிதமான குறிப்புகளுடன் ஆதாரங்களுடன் மேற்கோள்களுடன், நகைச்சுவை சேர்த்து அழகான பேச்சுடன் தீர்ப்பினை வழங்கினார்.
' வாழ்வை வழிநடத்தி செல்வது - விதியே ' என்பது தீர்ப்பானது. பார்வையாளர்களுக்கு சற்றும் சோர்வு தராமல் நிகழ்வு மிகவும் சுறுசுறுப்புடன் அமைந்தது. கணேசன் ஹரி நாராயணன், செல்வத்திரவியம், கே.வி.கே.பெருமாள் ஆகியோரும் வாழ்த்துரை வழங்கிட நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் தில்லி காலை இலக்கிய பேரவையின் பொது செயலாளர் பா.குமார், தமெரிக்கா டிவி நிறுவனர் மகேஷ் நாட்டாண்மையோடு இணைந்து நன்றியுரை வழங்க அனைவரினுடைய பாராட்டுடனும் பிரியாமனம் கொண்டு நிகழ்வு ...பார்வையாளர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவு பெற்றது. கொரோனா காலத்தினால் வெளியிலே செல்ல இயலாத இந்த சூழலிலே இந்த நிகழ்வு பல ஆயிரக்கணக்கானோரின் மனதினில் சந்தோஷத்தினை விதைத்து மனம் விட்டு சிரிக்கவும் சிந்திக்கவும் வாய்த்த நிகழ்வாக அமைந்தது என்றால் அது மிகை அன்று. இந்த நிகழ்வினை ஜூம் செயலி வழியாகவும், முகநூல் தளம் மூலமும், தமெரிக்கா டிவியின் நேரடி ஒளிபரப்பின் மூலமும் பல்லாயிரம்பேர் காணும் வாய்ப்பு கிட்டியது..தமிழின் இனிமை தேனாகப்பாய்ந்து பலரின் இதயத்தினை இனிக்க வைத்தது.
– தினமலர் வாசகர் சிங்காரவேலு பாலசுப்பிரமணியன்

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us