ஸ்டாலினுக்கு உலக தமிழ் வம்சாவளி அமைப்பு நன்றி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஸ்டாலினுக்கு உலக தமிழ் வம்சாவளி அமைப்பு நன்றி

மே 07,2021 

Comments (1)

திமுக.,வின் தேர்தல் அறிக்கையில் வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என உறுதிமொழி அளிக்கப்பட்டிருந்தது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு தனி துறை அமைக்கப்படும் எனவும் ஸ்டாலின் கூறி இருந்தார். தற்போது இந்த அறிவிப்புக்களுக்காக உலக தமிழ் வம்சாவளி அமைப்பு சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், தமிழகத்தில் தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு. க. ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்கும் இவ்வேளையில் வெளிநாடு வாழ் தமிழருக்கு என தனி அமைச்சகத்தை உருவாக்க உள்ளார். இதன் மூலம் புலம்பெயர்ந்த தமிழர்கள் படும் இன்னல்களை கலையும் தமிழர் நலனில் அக்கறை கொள்ளவும் புதிய அமைச்சகம் உருவாக்கப்பட உள்ளது. இதன் மூலம் உலகெங்கும் உள்ள தமிழர்கள் இதயத்தில் நீங்கா இடம்பெற்று சிம்ம சொப்பனமாக மு க ஸ்டாலின் விளங்குகிறார்.
உலக மக்கள் தொகையில் 2% உள்ள ஒரு சமூகம் அதற்காக ஒரு அமைச்சகம் உருவாக்கப்பட உள்ளது இதுவே முதல் தடவை. மேலும் இவ்வமைச்சரவை இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் அனுபவமிக்க மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்ட அமைச்சர்களாக தென்படுகிறார்கள். இதன் மூலம் 54 வருட அரசியல் அனுபவம் அமைச்சரவை பட்டியலில் தெரிகிறது. இந்த சிறப்பான ஒரு அமைச்சகத்தை உருவாக்கியதற்காக உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு நன்றி கூறுகிறது என அவ்வமைப்பின் தலைவர் செல்வகுமார் தெரிவித்தார்.
– செல்வக்குமார், தலைவர் – உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜூன் 19, ஜூலை 3ல் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் விளையாட்டுப் போட்டிகள்

ஜூன் 19, ஜூலை 3ல் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் விளையாட்டுப் போட்டிகள்...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
a natanasabapathy - vadalur,India
09-மே-202108:56:44 IST Report Abuse
a natanasabapathy ஸ்ரீலங்காவில் 200000 தமிழர்கள் யாரால் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை இந்த உலக்கை தமிழ் மன்றம் மறந்துவிட்டு ஜால்றா அடிக்கிறது
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us