சிங்கப்பூரில் அன்னையர் தின வழிபாடு – ஸ்ரீ அஷ்ட லட்சுமி மஹா யாகம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் அன்னையர் தின வழிபாடு – ஸ்ரீ அஷ்ட லட்சுமி மஹா யாகம்

மே 10,2021 

Comments

மே திங்கள் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையை அன்னையர் தினமாக உலகெங்கும் கொண்டாடி வருகின்றனர். ஆனால் தாய் தந்தையரை – அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வமாக வழிபட்டு வருவது நமது பாரம்பரிய மரபு. வைணவத்தில் நாள்தோறும் தாயார் ஸ்ரீ மகாலட்சுமியைச் சேவிப்பது வழக்கம். தாயாரைச் சேவித்த பின்னரே பெருமாளை வணங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் மே ஏழாம் தேதி முதல் ஒன்பதாம் தேதி வரை மூன்று நாட்கள் வைகானஸ யஷோ பூஷணம் அம்மன்குடி வெ.ஸ்ரீநிவாச பட்டாச்சார்யார் தலைமையில் ஸ்ரீ அஷ்ட லட்சுமி மஹா யாகம் – சுமங்கலி பூஜை – திரிசதி அர்ச்சனை முதலியன வெகு விமரிசையாக நடைபெற்றன.
மே ஏழாம் தேதி முதல் ஒன்பதாம் தேதி வரை ஸ்ரீ சூக்த மஹா யாகம் நான்கு காலமாக மிகச் சிறப்பாக நடைபெற்றன. ஆயிரத்து இருநூறு ஆவர்த்திகள் ஹோமம் செய்யப்பட்டு ஸ்ரீ மஹாலட்சுமித் தாயாருக்கு – தலைமை அர்ச்சகர் புனித கலசத்தை சிரமேற் கொண்டு ஆலயம் வலம் வந்து கலசத் திருமஞ்சனம் செய்யப்பட்டது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. சுமங்கலியர் பதின்மர் அமர்ந்து அர்ச்சகர்கள் வழி நடத்திட சுமங்கலி பூஜை செய்து வழிபாடு நடத்தினர். இருநூறு ஆவர்த்திகள் ஹோமம் செய்து தாயார் ஸ்ரீ மஹாலட்சுமிக்குத் திருமஞ்சனம் – அலங்காரம் – மகா தீபாராதனை நடைபெற்றமை மெய்சிலிர்க்க வைத்தவையாக விளங்கின. முத்தாய்ப்பு நிகழ்வாக இருநூறு கிலோ அரிசி கொண்டு – ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சந்நிதானம் முன் திருப்பாவாடை சமர்ப்பிக்கப்பட்டது. இன்றைய சூழல் கருதி சிறிய அளவிலேயே இது மேற்கொள்ளப்பட்டது. பழங்கள் – பட்சணங்கள் – காய் கனிகள் = இனிப்பு வகைகள் – கார வகைகள் என மலர்சூடப் படைக்கப்பட்டது. வழக்கமாக பிரசாதம் அமர்ந்து சாப்பிட ஏற்பாடு செய்யப்படும். ஆனால் கோவிட் 19 சூழலால் பக்தப் பெருமக்களுக்குப் பிரசாதங்கள் – கதம்ப சாதம் – சர்க்கரைப் பொங்கல் – இனிப்பு வகைகள் – முருக்கு போன்ற கார வகைகள் பொட்டலங்களாக வழங்கப்பட்டன. சுருங்கக் கூறின் அன்னையர் தின விழா கண்ணுக்கும் கருத்துக்கும் வயிற்றுக்கும் விருந்தாக அமையுமாறு ஆலய நிர்வாகக் குழு ஏற்பாடு செய்திருந்தமை பாராட்டுக்குரியது. பக்தப் பெருமக்கள் லோக மாதாவின் திருவருளைப் பூரணமாகப் பெற்று மகிழ்ந்தனர் எனலாம்.
– நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜூன் 19, ஜூலை 3ல் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் விளையாட்டுப் போட்டிகள்

ஜூன் 19, ஜூலை 3ல் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் விளையாட்டுப் போட்டிகள்...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us