இந்தியாவிற்கு அமெரிக்க தொண்டு நிறுவனம் மருத்துவ உதவி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

இந்தியாவிற்கு அமெரிக்க தொண்டு நிறுவனம் மருத்துவ உதவி

மே 11,2021 

Comments

டெக்சாசின் ஹுஸ்டனில் செயல்பட்டு வரும் சேவா இன்டர்நேஷனல் நிறுவனம் 6 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை இந்தியாவிற்கு வழங்கி உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இந்தியா மீண்டு வருவதற்காக கடந்த 2 வாரங்களில் 6 மில்லியன் டாலர்களுக்கு அதிகமான தொகையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள், வென்டிலேட்டர் உள்ளிட்ட உயிர்காக்கும் உபகரணங்களை அளிக்க ஏற்பாடு செய்துள்ளது.
260 இன்னோஜன் ஆக்சிஜன் கொள்கலன்கள், 1000 ஆக்சிமீட்டர்கள் உள்ளிட்டவைகள் மே 7 ம் ஆண்டு, நியூயார்க்கில் இருந்து இந்தியாவிற்கு அனுப்பி வைத்துள்ளது. யுபிஎஸ் அறக்கட்டளை, சேவா இன்டர்நேஷனல் அமைப்புடன் இணைந்து டில்லிக்கு இதனை இலவசமாக விமானம் மூலம் அனுப்பி வைத்துள்ளது.
அமெரிக்காவின் பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து 3.5 மில்லியன் டாலர் மதிப்பிலான 7482 ஆக்சிஜன் கொள்கலன்கள் ஆகியன இரண்டு தவணைகளாக இந்தியா அனுப்பப்பட்டுள்ளன. இவற்றில் 2084 ஏற்கனவே இந்தியா வந்தடைந்து விட்டன. இவை சேவா அமைப்பின் கிளை அமைப்புக்கள் மூலம் அரசு மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்கள், சேவா அமைப்பால் நடத்தப்படும் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அடுத்த 2 வாரங்களில் 6000 கூடுதல் ஆக்சிஜன் கொள்கலன்களை இந்தியா அனுப்பவும் சேவா திட்டமிட்டுள்ளது. விரைவில் இவை இந்தியா சென்றடைய ஏற்பாடு செய்யப்படும் என சேவா அமைப்பின் தலைவர் அருண் கன்கனி தெரிவித்துள்ளார். மருத்துவ உபகரனங்களை வாங்கவும், மேலும் நன்கொடைகள் பெறவும் அட்லான்டாவில் சேவாவின் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை நிர்வகிக்க 10 சேவா தன்னார்வலர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆக்சிஜன் கொள்கலன்கள் இந்தியாவின் ஆந்திரா, அசாம், பீகார், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 17 மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. இந்தியாவிற்கு மருத்துவ உதவி அளிப்பதற்கான பிரச்சாரம் ஏப்ரல் 23 ம் தேதி துவங்கப்பட்டது. ஃபேஸ்புக் மூலம் நடத்தப்பட்ட இந்த பிரச்சாரத்தில் 104,000 க்கும் அதிகமானவர்கள் நன்கொடை அளித்துள்ளனர். இந்துக்களின் நலனிற்காக அமைக்கப்பட்ட சேவா இன்டர்நேஷனல், பேரிடர் உதவி, கல்வி, வளர்ச்சிக்கான பணிகளுக்கு உதவி அளித்து வருகிறது. அமெரிக்கா முழுவதும் 43 கிளைகளை கொண்டு சேவா இயங்கி வருகிறது.
– தினமலர் வாசகர் வித்யாசாகர்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜூன் 19, ஜூலை 3ல் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் விளையாட்டுப் போட்டிகள்

ஜூன் 19, ஜூலை 3ல் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் விளையாட்டுப் போட்டிகள்...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us