ராசல் கைமாவில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வரும் 200 ஆண்டு கால பழமையான முஹம்மது பின் சலீம் பள்ளிவாசல் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ராசல் கைமாவில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வரும் 200 ஆண்டு கால பழமையான முஹம்மது பின் சலீம் பள்ளிவாசல்

மே 12,2021 

Comments

ராசல் கைமா : ராசல் கைமா ஐக்கிய அரபு அமீரகத்தின் ( UNITED ARAB EMIRATES ) ஒரு பகுதி ஆகும். இந்த நகரம் துபாய் நகரில் இருந்து சுமார் சுமார் 125 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த நகரில் கடற்கரைப் பகுதி அருகே முஹம்மது பின் சலீம் பள்ளிவாசல் அமைந்துள்ளது. இந்த பள்ளிவாசல் சுமார் 200 ஆண்டு காலம் பழமையானது. இந்த பள்ளிவாசலின் உட்புறம் 60 தூண்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. மேற்புறத்தில் பேரீச்சை மரங்களின் பட்டைகள் உள்ளிட்டவற்றை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. சிமெண்ட், சுண்ணாம்பு, மலைக் கற்கள் உள்ளிட்டவற்ரை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளதால் எப்போதும் இந்த பள்ளிவாசல் குளிரான சூழ்நிலை இருந்து வருகிறது.
இந்த பள்ளிவாசல் 200 ஆண்டு காலம் பழமையானதாக இருந்தாலும் இந்த பள்ளிவாசல் அமைந்துள்ள இடத்தில் மக்கள் தொழுவதற்காக 400 ஆண்டுகளுக்கு முன்னரே கூடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இங்கிலாந்து நாட்டின் ஆக்ரமிப்பாளர்களால் பள்ளிவாசல் இடிக்கப்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து இந்த பள்ளிவாசல் மீண்டும் கட்டப்பட்டுள்ளது. இந்த பள்ளிவாசல் ஷேக் சகர் பின் ராஷித் அல் காசிமியின் ஆட்சிக்காலமான 1777 மற்றும் 1803 ஆம் ஆண்டு காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளிவாசல்களில் அமைக்கப்பட்டுள்ள ஜன்னல்கள் தமிழகத்தில் உள்ள வீடுகளின் அமைப்பை ஒத்ததாக உள்ளது. 31 ஜன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கதவுகள் மரத்தினால் ஆனவை.
கடந்த 200 ஆண்டுகளாக இந்த பள்ளிவாசலில் ஐந்து வேளை தொழுகைகளும் தவறாமல் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. பழமை மாறாமல் இந்த பள்ளிவாசல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. கடைசியாக 2013 ஆம் ஆண்டு இந்த பள்ளிவாசல் புதுப்பிக்கப்பட்டது. ராசல் கைமா ஆட்சியாளரும், சுப்ரீம் கவுன்சில் உறுப்பினருமான ஷேக் சவுத் பின் சகர் அல் காசிமி உத்தரவின் பேரில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஒரே நேரத்தில் இந்த பள்ளிவாசலில் ஆயிரம் பேர் தொழுகை செய்ய முடியும்.
மேலும் தொழுகை நேரங்களை தவிர நேரங்களில் முஸ்லிம் அல்லாதவர்கள் பார்த்துச் செல்லவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த பள்ளிவாசல் அமீரகத்தின் பழமையான பள்ளிவாசல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இதன் காரணமாக அமீரகத்தில் வசித்து வரும் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் பழமையான இந்த பள்ளிவாசலை காண ஆர்வத்துடன் இங்கு வருகின்றனர்.
--நமது செய்தியாளர் காஹிலா


Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜூன் 19, ஜூலை 3ல் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் விளையாட்டுப் போட்டிகள்

ஜூன் 19, ஜூலை 3ல் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் விளையாட்டுப் போட்டிகள்...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us