பிரியாணி விற்பனை மூலம் தமிழகத்திற்கு நிதி அளித்த நியூஜெர்சி அஞ்சப்பர் உணவகம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பிரியாணி விற்பனை மூலம் தமிழகத்திற்கு நிதி அளித்த நியூஜெர்சி அஞ்சப்பர் உணவகம்

மே 12,2021 

Comments

கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய தமிழகம் உயிர்தெழ வேண்டி, தமிழ்நாடு பவுன்டேஷனுக்கு நிதி திரட்டும் பொருட்டு மே 11 ம் தேதி நியூஜெர்சி வடக்கு ப்ரன்ஸ்விக் அஞ்சப்பர் உணகத்தின் சார்பில் 100 சதவீதம் நிதி திரட்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு பவுன்டேஷன் என்பது அமெரிக்காவில் வசிக்கும் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்காக 1974 ம் ஆண்டு துவங்கப்பட்ட ஒரு சேவை அமைப்பாகும். ஒரு நாள் விற்பனை மூலம் பெற்றப்படும் தொகை அனைத்தும் நிதியாக வழங்க திட்டமிடப்பட்டிருந்தது.இதன் செய்தி பரவியதும் மக்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்ததுடன், உணவகத்திற்கு நேரில் வந்தும் தங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தினார். இதனால் உணவகத்தில் விற்பனை துவங்கிய சில மணி நேரங்களிலேயே அனைத்து பிரியாணிகளும் விற்று தீர்ந்தன. முதல் இரண்டு மணி நேரத்திலேயே 300 பிரியாணிகள் வரை விற்கு தீர்ந்தன. உணவக சமையல் கலைஞர்களும் வழக்கமாக தயாரிப்பதை விட 3 மடங்கு அதிக பிரியாணிகளை தயாரித்தனர். இறுதியாக அஞ்சப்பர் உணவகம் மூலம் 6100 டாலர்கள் நிதி திரட்டப்பட்டு, நன்கொடையாக வழங்கப்பட்டது. அமெரிக்காவில் உள்ள தமிழ் அமைப்புக்கள் அனைத்தும் இந்த நிதி திரட்டும் பணியில் ஒன்றிணைந்து 20 லட்சம் டாலர்களை திரட்டினர். இந்த தொகை முழுவதும் ஆக்சிஜன் கொள்கலன்கள் உள்ளிட்ட தமிழக மக்களுக்கு தேவையான மற்ற மருத்துவ உபகரணங்களுக்கும் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த மோசமான சமயத்தில் கொரோனா வைரஸ் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் தமிழகத்திற்கு உதவுவதற்காக இவ்வளவு பெரிய தொகையை திரட்ட உறுதுணையாக இருந்த நியூஜெர்சியில் உள்ள அஞ்சப்பர் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் அஞ்சப்பர் உணவகம் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளது.  கொரோனா இரண்டாம் அலையின் நெருக்கடியில் இருந்து இந்தியா விரைவில் மீண்டு வரும் என நம்புவோம். அதற்காக பிரார்த்தனை செய்வோம்.

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜூன் 19, ஜூலை 3ல் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் விளையாட்டுப் போட்டிகள்

ஜூன் 19, ஜூலை 3ல் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் விளையாட்டுப் போட்டிகள்...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us