நோன்பு திறக்கும் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

நோன்பு திறக்கும் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி

மே 13,2021 

Comments

ராசல் கைமா : அமீரகத்தின் ராசல் கைமா நகரில் இருந்து ஓமன் நாட்டின் முசந்தம் பகுதியை நோக்கி செல்லும் நெடுஞ்சாலையில் எமிரேட்ஸ் ஸ்டீவ்டோரிங் என்ற நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் ராசல் கைமா, சார்ஜா, புஜேரா உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள துறைமுகங்களுக்கு வந்து செல்லும் கப்பல்களில் இருந்து பொருட்களை ஏற்றி, இறக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.
இந்த பணியில் ஈடுபட்டு வரும் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தினமும் நோன்பு திறக்கும் உணவுப் பொருட்களை வழங்கி வருகிறது. இது பிரியாணி, பேரீச்சம் பழம், தண்ணீர் பாட்டில், ஜூஸ், வாழைப்பழம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கொண்ட பையாக வழங்கப்படுகிறது.
இந்த பணியில் அந்த நிறுவனத்தின் பல்வேறு துறை அலுவலர்கள் அப்துல்லா, அமிர் ஜஹாங்கீர், இம்ரான் ஜாபெரி, ஜெசந்த், மனோஜ் பிரபாகர், அஹமது சுலைமான் ஆகியோருடன் இர்ஷாத், சபின், ப்ரதிக், ஜப்பு ரஹ்மத்துல்லா உள்ளிட்ட குழுவினர் தினமும் தங்களது அலுவலகப் பணிகள் முடிந்த பின்னர் தன்னார்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சமூக ஆர்வலர்கள் முதுவை ஹிதாயத், திண்டுக்கல் ஜமால் முஹைதீன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று நோன்பு திறக்கும் உணவுப் பொருட்களை வழங்கினர். மேலும் நோன்பு திறக்கும் உணவுப் பொருட்கள் வழங்கும் பணியானது கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடித்து நடக்கிறது.
-- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us