தமிழகத்திற்கு ரிச்மாண்டு தமிழ்ச்சங்க கொரோனா கால மருத்துவ உபகரணங்கள் உதவி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

தமிழகத்திற்கு ரிச்மாண்டு தமிழ்ச்சங்க கொரோனா கால மருத்துவ உபகரணங்கள் உதவி

மே 31,2021 

Comments

     அமெரிக்காவில் உள்ள வர்ஜீனியா மாவட்டத்தில் இருக்கும் இரிச்மண்டு தமிழ்ச்சங்கம், கோவிட் நோய் இரண்டாவது அலை தமிழ்நாட்டை மோசமாகத் தாக்கியது பற்றிய செய்திகளை பார்த்ததும், ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை திருவான்மியூர் மற்றும் ஏகம் அறக்கட்டளை ஆகியவற்றுடன் சேர்ந்திணைந்து சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு அவசர மருத்துவ உபகரணங்களை வழங்க முடிவெடுத்தது.

ஒற்றுமையே உயர்வு என்ற கோட்பாட்டுடன் செயல்படும் இரிச்மண்டு தமிழ்ச்சங்கம், கோவிட் நிவாரண நிதி திரட்டும் முயற்சியில் தீவிரமாக இறங்கி, வர்ஜீனியா மற்றும் பல்வேறு இடங்களில் வாழும் தமிழ் புலம்பெயர்ந்தோரின் பங்களிப்பின் உதவியோடு இருபதாயிரம் டாலர் நிதி திரட்டி உள்ளது.

உதவும் நடவடிக்கைகளின் முதல் கட்டமாக, இந்த குழு 9l ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் 10 எண்களை பின்வரும் மருத்துவமனைகளுக்கு நன்கொடையாக வழங்கி உள்ளனர்.

1. பொது மருத்துவமனை, சிதம்பரம்

2. பொது மருத்துவமனை, திருவண்ணாமலை

3. பொது மருத்துவமனை, பொன்னேரி

4. ஆத்மா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், திருச்சி

5. நகர சமூக சுகாதார மையம், வடபழனி

6. வி.எச்.எஸ்., தரமணி

7. இந்து மிஷன் மருத்துவமனை, நங்கநல்லூர்

கிடைத்தவுடன் மருத்துவமனைகள் இந்த உபகரணங்களை உடனடியாக பயன்படுத்த தொடங்கிவிட்டனர், டாக்டர் அசோக் பாஸ்கர், சி.எம்.ஓ, ஜி.எச்., சிதம்பரம் இதைப் பற்றி பின்வருமாறு கூறினார்.

தொடர்ச்சியான ஆக்ஸிஜன் ஆதரவில் இருந்து அகற்றப்பட்ட நோயாளிக்கு இதை நாங்கள் பயன்படுத்தினோம். இந்த செறிவு இடைப்பட்ட ஆக்ஸிஜன் பயனாளிக்கு பயனுள்ளதாக இருக்கும். நிச்சயமாக இது எங்கள் ஆக்ஸிஜன் தேவைகளை குறைக்கும்.”

இரண்டாம் கட்டத்தில், ஆக்ஸிஜன் பாய்வு மீட்டர், என்95 முகமூடிகள், பிபிஇ கருவிகள் மற்றும் இதுபோன்ற பிற உபகரணங்களும் மருத்துவமனைகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட உள்ளது.

- தினமலர் வாசகி மீனா சங்கரன்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜூன் 19, ஜூலை 3ல் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் விளையாட்டுப் போட்டிகள்

ஜூன் 19, ஜூலை 3ல் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் விளையாட்டுப் போட்டிகள்...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us