கதைக்களத்தில் சிறுகதை, நூல் அறிமுகப் போட்டிகள் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

கதைக்களத்தில் சிறுகதை, நூல் அறிமுகப் போட்டிகள்

ஜூன் 02,2021 

Comments

 சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் மாதாந்திரகதைக்களம் நிகழ்வு கடந்த மே 9ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை, 9ஆம் ஆண்டின் தொடக்க கதைக்கள நிகழ்வாகஇணையம் வழி நடைபெற்றது.நிகழ்வின் பதிவை இணையத்தில் காணலாம். http://youtube.com/c/singaporetamilwritersமாதந்தோறும் நடைபெறும்.

கதைக்களத்தில், இணையம் வழி இணைந்தவர்களையும், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக யூடியூப் ஒளிவழியில் கதைக்களத்தை நேரலையில் பார்த்துக்கொண்டிருந்தவர்களையும் ஒருங்கிணைப்பாளர் திருவாட்டி பிரேமா மகாலிங்கம் வரவேற்று நிகழ்வை நெறிப்படுத்தினார். இந்த மாதக் கதைக்களத்திற்கு வந்திருந்த படைப்புகளில் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றிபெற்றஒரு படைப்பை பங்கேற்பாளர்கள் வாசித்தனர். 

கதைக்களத்திற்குவந்திருந்த பொதுப்பிரிவு கதைகள் பற்றிய ஆக்கபூர்வமான, சுவையான கருத்துகளை எழுத்தாளர்கள் பரிமாறிக்கொண்டனர்.9ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்த கதைக்களத்தில் இடம்பெற இருக்கும் புதிய அங்கங்களைச்செயலாளர் திருவாட்டி கிருத்திகா பகிர்ந்து கொண்டார். 

‘எழுத்தாளர் சந்திப்பு’ நிகழ்ச்சியில் ஓர் உள்ளூர் எழுத்தாளர் கலந்துகொண்டு அவருடைய எழுத்துப் பயணத்தைப் பகிர்ந்து கொள்வார். தொடர்ந்து, அவருடன் கதைக்களப் பங்கேற்பாளர்கள் அவருடைய படைப்புகள் குறித்து கலந்துரையாடலாம். வெகுவாக வரவேற்பைப் பெற்று வரும் உள்ளூர் எழுத்தாளர் அங்கத்துடன் ‘எழுத்தாளர் சந்திப்பு’ துவங்கும்.

மேலும், புதிதாக இரண்டு போட்டிகள் அறிமுகம் ஆகும் என்று அவர் அறிவித்தார். சிறுகதைப் போட்டியில் புதிதாக இளையர் பிரிவு அறிமுகப்படுத்தப்படுகிறது. இப்பிரிவில் தொடக்கக்கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களும், 16 வயது முதல் 20வயது வரையிலான எவரும் பங்குபெறலாம். வரும் மாதங்களிலிருந்து இடம்பெற இருக்கும் மாணவர் மற்றும் இளையவர்களுக்கான சிறுகதைப் போட்டிகள், நூல் அறிமுகப் போட்டி, எழுத்தாளருடன் கலந்துரையாடல்அங்கம் பற்றி விளக்கினார். 

சிறுகதை விமர்சனப் போட்டிக்குப் பதிலாக, இனி ‘நூல் அறிமுகப் போட்டி’ அறிமுகப்படுத்தப்படுகிறது. தேசிய நூலக வாரியத்தில் உள்ள நூலுக்கு 140 வார்த்தைகளில் அறிமுகம் எழுதலாம். தேர்ந்தெடுக்கப்படும் அறிமுகங்களுக்கு தலா 20 வெள்ளி பரிசாக வழங்கப்படும். அவை தமிழ் முரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

மேல்விவரங்களுக்கு: http://singaporetamilwriters.com/kathaikalamநிகழ்ச்சியில் தொடர்ந்து,சிங்கை உள்ளூர் எழுத்தாளர் அறிமுகம் அங்கத்தில், எழுத்தாளர், கவிஞர்என்று பன்முகத்திறமை கொண்ட நம் உள்ளூர் மூத்தகவிஞர்களில் ஒருவரானகவிஞர் பாத்தேறல் இளமாறன்அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு, எழுத்துப்பணி அவருக்கு வழங்கப்பட்ட விருதுகள் போன்ற தகவல்களை காணொளி வடிவமாகசிறப்பாகக்குமாரி கலைவாணி இளங்கோ வழங்கினார்.இந்த அங்கத்தை செயலவை உறுப்பினர் திருவாட்டி மலையரசி வழிநடத்தினார்.சிறப்புப் பேச்சாளராக மலேசிய தமிழ் வானொலி இலக்கிய நிகழ்ச்சித் தயாரிப்பாளர், எழுத்தாளர், இயல் பதிப்பகத்தின் தோற்றுநர் திருமதி பொன் கோகிலம், 'வெண்பலகை எழுத்தாளர்கள்' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.இயல்பான நடையில் சிறப்பாக இரண்டு வெண்பலகை எழுத்தாளர்களின் கதைகளைச் சொல்லி அனைவர் உள்ளத்திலும் இடம்பிடித்தார். கலந்துரையாடல்களிலும் கேட்கப்பட்ட கேள்விகளுக்குச் சிறப்பாகப் பதில் தந்தது குறிப்பிடத்தக்கது. 

கழகத் தலைவர் திரு. நா. ஆண்டியப்பன்அவர்கள், மூத்த மற்றும் வளரும் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்காக ‘கொவிட்’ காலத்திற்குப் பிறகு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், இயல் பதிப்பகம் மற்றும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து புத்தகத் திருவிழாக்கள் நடத்த முயற்சிகள் எடுக்கலாம். இதன்வழி மலேசியா, சிங்கப்பூர்எழுத்தாளர்களின் நூல்கள் இரு நாடுகளிலும் கிடைக்க வழிபிறக்கும் என்ற ஆலோசனையை முன்வைத்தார். மேலும் கதைக்களத்தில் வெற்றிபெறும் படைப்புகளையும் முத்தமிழ் விழா போட்டியில் பரிசுபெற்ற கதைகளையும் விரைவில் நூல் வடிவில் கொண்டு வரும் எண்ணம் இருப்பதாகவும் கூறினார். இந்தத் தகவல் கதைக்கள உறுப்பினர்களுக்கு உற்சாகம் அளிப்பதாக இருந்தது.

இந்த மாதக் கதைக்களத்தில் பரிசுபெற்ற எழுத்தாளர்களுக்குபாராட்டுகள்

சிறுகதைப் போட்டி: மாணவர் பிரிவு : புத்தகப் பரிசு - கவிநயா சாய் 

சிறுகதை விமர்சனப் போட்டி:முதல் பரிசு: சித்ரா தணிகைவேல் இரண்டாம் பரிசு:ஷோபா குமரேசன்

சிறுகதைப் போட்டி: பொதுப்பிரிவுமுதல் பரிசு: அசோக்குமார்இரண்டாம் பரிசு: சியாம்குமார் மூன்றாம் பரிசு: பூங்குழலி
- நமது செய்தியாளர் வெ.புரு ேஷாத்தமன்
Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜூன் 19, ஜூலை 3ல் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் விளையாட்டுப் போட்டிகள்

ஜூன் 19, ஜூலை 3ல் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் விளையாட்டுப் போட்டிகள்...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us