வெலிங்டனில் மஹா பெரியவா ஜெயந்தி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

வெலிங்டனில் மஹா பெரியவா ஜெயந்தி

ஜூன் 09,2021 

Comments

நியூஸிலாந்து தலைநகரமான வெலிங்டனில் காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகளின் 128 வது ஜெயந்தி சென்ற சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெலிங்டனில் பிடோனி இந்தியன் கல்ச்சுரல் அரங்கத்தில் இரண்டு நாட்களும் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.


சனியன்று காலை 9 மணியளவில் ஸ்ரீ பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் தலைமையில் 11 பேர் அடங்கிய வேத விற்பன்னர்கள் கலசம் அமைத்து விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவசனம், ருத்ர ஆவாஹனம், லகுன்யாசம், ஏகாதச ருத்ரம், ருத்ர ஆவர்த்தி ஹோமம், 108 சங்காபிஷேகம் பெரியவா நடைபெற்றது. கலச தீர்த்தத்தை கொண்டு மகா பெரியவாளின் விக்ரகத்திற்கு எல்லா விதமான அபிஷேகங்கள் செய்யப்பட்டு ஆரத்தி காண்பிக்கப்பட்டது.


அன்று மாலை 6.30 மணியளவில் பஜனையும் தொடர்ந்து 7 மணிக்கு ஸ்ரீ சாகேத் விஷ்ணுபோட்லா அவர்களின் வீணை கச்சேரி நடந்தது.


மறு நாள் ஞாயிறன்று காலை 9 மணிக்கு கலசம் அமைத்து விக்னேஸ்வர பூஜையில் தொடங்கி புண்யாஹவசனம் மகா கணபதி ஹோமம் மற்றும் நவகிரக ஹோமம் செய்யப்பட்டது. பின்னர் மஹா பெரியவா பாதுகைக்கு அனைத்து அபிஷேகங்கள் முறைப்படி செய்யப்பட்டது. பின்னர் அலங்காரம் செய்து பெரியவா பாதுகை மற்றும் அவரின் உருவ சிலையை சப்பரம் மற்றும் பல்லக்கில் வைக்கப்பட்டு அரங்கை சுற்றி ஊர்வலமாக வந்து அர்ச்சனை செய்து ஆரத்தி காண்பிக்கப்பட்டது. அவ்வமயம் அஙகுள்ள சிறுமிகள் மற்றும் பெண்கள் அனைவரும் பாடிய ஸ்லோகங்கள் மற்றும் பாடல்களை சிறப்பாக இருந்தது.. பக்தர்கள் அனைவரும் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர என்ற மந்திரத்தை ஜபித்த வண்ணமிருந்தனர். பின்னர் அலங்காரம் மற்றும் அர்ச்சனை செய்து கீதங்கள் இசைத்து 2 மணியளவில் நிறைவு பெற்றது. ஒவ்வொரு மாதமும் அனுஷ நட்சத்திரத்தன்று மகாபெரியவர் பக்தர்கள் ஒன்று கூடி வேதங்கள் ஓதியும், அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்தும் மஹா பெரியவாளை பூஜித்து வருகின்றனர். இரண்டு நாட்களும் நிறைய பகதர்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டு ஸ்ரீ மகா பெரியவாளின் பேரருளை பெற்றனர். பக்தர்கள் அனைவருக்கும் இரண்டு நாட்களும் மகா பிரசாதம் வழங்கப்பட்டது.


- நமது செய்தியாளர் சந்திரா சங்கரன்

Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜன.23 ல் சிறப்பு பன்னாட்டு பட்டிமன்றம்

ஜன.23 ல் சிறப்பு பன்னாட்டு பட்டிமன்றம்...

சிங்கப்பூரில் ஜன., 4 முதல் 14 வரை வைகுண்ட ஏகாதசி மஹோற்சவம்

சிங்கப்பூரில் ஜன., 4 முதல் 14 வரை வைகுண்ட ஏகாதசி மஹோற்சவம்...

நியூசெர்சி தமிழ்ப் பேரவை புதி நிர்வாகிகள்- 2022

நியூசெர்சி தமிழ்ப் பேரவை புதி நிர்வாகிகள்- 2022 ...

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us