முத்தமிழ்க்கலைவிழா (உலக சாதனை முயற்சி) | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

முத்தமிழ்க்கலைவிழா (உலக சாதனை முயற்சி)

ஜூன் 09,2021 

Comments

   தேனமுதத்தமிழ் மக்கள் நல அறக்கட்டளை - தில்லி காலை இலக்கியப்பேரவை மற்றும் தமிழ் அமெரிக்கா தொலைகாட்சி அமைப்புக்கள் இணைந்து இணைய வழியே தமிழ் கலை நிகழ்வுகளை தொடர்ந்து எழுநூற்று இருபது மணி நேரங்களுக்கு நடத்திடவும் அதனை ஒரு உலக சாதனையாக மாற்றிட ஆரஞ் உலக சாதனை அமைப்போடு இணைந்தும் நிகழ்ச்சிகளை நடாத்தி வருகிறார்கள்.
அதன் ஒருபகுதியாக கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பஹ்ரைன் முத்தமிழ் சொல்வேந்தர் மன்றத்தின் தலைவர் சொல்வேந்தர். சி.பாலசுப்பிரமணியன் அவர்கள் ' இலக்கிய செறிவும் தமிழ் இலக்கியங்களும் ' என்ற தலைப்பினிலே நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு தமிழ் இலக்கியத்தின் சிறப்பு அதன் மேன்மை கம்பராமாயணத்தில் இலக்கண பயன்பாடு, திரு.கி.வா.ஜகந்நாதன் அவர்களின் சிலேடைப்பேச்சு, ஒட்டக்கூத்தருக்கு உண்மையான பெயர் ஒட்டவைத்த கூத்தர், கம்பராமாயண பாடல் நயம் தமிழ் திரைப்பட பாடலில் எப்படி பயன்படுத்தப்பட்டது, அவ்வையார் நான்கு பாடல்களைக்கொண்டு நான்கு கோடி பாடல்களாக கணக்கிட்டு கூறினார் போன்ற சுவைமிகு தகவலைகளை உள்ளடக்கி உரையாற்றினார்.
அதன் பிறகு..திரு.மரு.கந்தசாமி செல்வன் அவர்கள் - மருத்துவத்தில் அன்றும் இன்றும் - என்ற தலைப்பினிலே உரையாற்றினார்கள்..அடுத்து திரு.ஆ.பிரம்மா நாயகம் அவர்கள் தமிழும் சுவையும் எனும் தலைப்பினிலும் உரையாற்ற தொடர்ந்து ஆஸ்திரேலியாவை சேர்ந்த திரு.சங்கர் சுப்பிரமணியன் அவர்கள் கவியும் அதன் தாக்கமும் எனும் தலைப்பினில் உரையாற்றினார்கள் தொடர்ந்து புளியம்பட்டி திருமதி சித்ரா சுப்பிரமணியம் அவர்கள் ' மனம் எனும் தோணி ' எனும் தலைப்பிலும் புதுச்சேரியினை சார்ந்த திரு.வி.கி.முனுசாமி அவர்கள் ' சுடுகளி மண்சிற்பம் ' எனும் தலைப்பினிலும் உரையாற்றினார்கள்..
நிகழ்வினை முனைவர் . பொன். சங்கரபாண்டியன் அவர்கள் முன்னிலை வகித்து உரையாற்ற திரு.செல்வசேதுராமன் அவர்கள் வரவேற்புரை நல்க...சாதனை பெண்மணி முனைவர் லதா சந்துரு (நிறுவனர் - தலைவர் தேனமுத தமிழ் மக்கள் நல அறக்கட்டளை) அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.. நிகழ்வின் ஒருங்கிணைப்பினில் முழுப்பொறுப்பினையும் ஏற்று தில்லி கலை இலக்கியப்பேரவை பொது செயலாளர் தமிழ்ப்பணி செம்மல் திரு.பா.குமார் அவர்கள் சிறப்புற அணைத்து பணிகளையும் செம்மையாக வழிநடத்தினார்கள். தொடர்ந்து மயிலாடுதுறை செம்பருத்தி குழுவினரின் சொல்லரங்கம் நிகழ்ச்சி திருமதி.சித்ரா.சிவராம கிருஷ்ணன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது நிகழ்வு தொடர்ந்து இரவுபகலாக நடந்துகொண்டுள்ளது.
-  தினமலர் வாசகர்- சி.பாலசுப்பிரமணியன் .

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜூன் 19, ஜூலை 3ல் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் விளையாட்டுப் போட்டிகள்

ஜூன் 19, ஜூலை 3ல் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் விளையாட்டுப் போட்டிகள்...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us