பிளோரிடா லேக் மேரி-பிளோரிடா தமிழ் அகாடமியின் பட்டமளிப்பு விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பிளோரிடா லேக் மேரி-பிளோரிடா தமிழ் அகாடமியின் பட்டமளிப்பு விழா

ஜூன் 10,2021 

Comments

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து-குறள்

பொருள்: ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்

இத்தகைய சிறப்பு வாய்ந்த கல்வியை அடுத்த தலைமுறைக்கு அழகாய் வழங்கி,அதற்கான அங்கீகாரத்தையும் விழாவாக நடத்தி பட்டங்களையும்,கோப்பைகளை வழங்கி பாராட்டியது பிளோரிடா லேக் மேரியில் உள்ள பிளோரிடா தமிழ் அகாடமி!

மே 29 அன்று மெய்நிகரில் இந்நிகழ்வு நடந்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கி, கோவிட்டில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு சிறு மௌன அஞ்சலி செய்து பின் ஆரம்பித்தனர். இவ்விழாவில் என்ன சிறப்பென்றால் மாணாக்கர்களுக்கு மட்டுமல்லாது ஆசிரியர்களையும் நன்கு சிறப்பித்தது பாராட்டத்தக்கது!

பயின்று பட்டம் பெரும் மாணாக்கர்களுக்கு பட்டங்களும் விருதுகளும் வழங்கியது போலவே, விடுப்பு எடுக்காமல் 100 % முழு வருகை பதிவு செய்த மாணாக்கர்களுக்கும் முழு வருகை பதிவு செய்த ஆசிரியரான திருமதி.திரிபுரசுந்தரி இளமதிக்கும் பாராட்டு வழங்கியது மிக நன்று

அதே போன்று குழந்தைகளின் தலைமைப் பண்பையும் பாராட்டி ஸ்காலர்ஷிப் விருதுகள் வழங்கப்பட்டது. அதற்கான சிறப்பு பயிற்சியாளர்கள் மூன்று பேருக்கும் பெயர் பதித்த சான்று விருதுகள் வழங்கப்பட்டன.மேலும் பெற்றோர் தன்னார்வலர்களையும் பாராட்டி விருதுகள் வழங்கினர். முடிவாக கலைவாணி அவர்களின் நன்றியரையுடன் இனிதே இந்நிகழ்வு நடந்தேறியது.

இந்நிகழ்வு அனைத்தையும் திரு.குழலன் மற்றும் திரு.மதி இருவரும் சிறப்பாய் தொகுத்து வழங்கினர். இப்பள்ளிக்கு தினமலர் சார்பாக வாழ்த்துகள்!

- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்





Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜூன் 19, ஜூலை 3ல் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் விளையாட்டுப் போட்டிகள்

ஜூன் 19, ஜூலை 3ல் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் விளையாட்டுப் போட்டிகள்...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us