குவைத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

குவைத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு

ஜூன் 12,2021 

Comments

குவைத் : குவைத் நாட்டுக்கு அரசுமுறைப் பயணமாக வருகை புரிந்த இந்திய வெளியுறவுத்துறை மந்திரி டாக்டர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் அவருடன் வந்த குழுவினருக்கு விமான நிலையத்தில் மிகவும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த வரவேற்பு நிகழ்வில் குவைத் நாட்டின் வெளியுறவுத்துறை துணை மந்திரி பொறுப்பு வகிக்கும் அப்துல் ரசாக் அல் கலீபா, குவைத் நாட்டுக்கான இந்திய தூதர் சிபி ஜார்ஜ், இந்தியாவுக்கான குவைத் நாட்டின் தூதர் ஜாசிம் அல் நஜ்ஜம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த ஆண்டு 2021-22 இந்தியா மற்றும் குவைத் ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான தூதரக உறவின் 60 ஆண்டுகள் ஆகும். இரு நாடுகளுக்கும் இடையில் நல்லுறவு நீடித்து வருகிறது. மேலும் இரு நாட்டு மக்களுக்கும் இடையிலும் இந்த உறவு சிறப்பாக இருந்து வருகிறது.

குவைத் நாட்டில் இந்தியாவைச் சேர்ந்த பத்து இலட்சம் பேர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு குவைத் அரசு சிறப்பான ஒத்துழைப்பை வழங்கி வருகிறது.

குவைத் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் சிறப்பான வர்த்தக ஒத்துழைப்பு நீடித்து வருகிறது. குவைத் நாட்டில் இருந்து இந்திய அரசு கச்சா எண்ணெயை அதிகமாக இறக்குமதி செய்து வருகிறது. அதேபோல் இந்தியாவில் இருந்து உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் காரணமாக ஆக்சிஜன் தேவை அதிகரித்தது. இதற்கு குவைத் அரசும், குவைத் நாட்டில் வசித்து வரும் இந்தியர்களும் தேவையான உதவிகளை வழங்கியதும் குறிப்பிடத்தக்கதும் ஆகும்.

இந்திய வெளியுறவுத்துறை மந்திரியின் குவைத் வருகையின் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு பல்வேறு வழிகளில் அதிகரிக்க உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- நமது செய்தியாளர் காஹிலா



Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜூலை 25 ல் சத்யநாராயண் கதை - குரு பூர்ணிமா

ஜூலை 25 ல் சத்யநாராயண் கதை - குரு பூர்ணிமா...

23 ல் கலிபோர்னியா ரிவர்சைடு ஸ்ரீ லட்சுமி நாராயண் மந்திர் ஷ்ராவன் மாத நிகழ்வு

23 ல் கலிபோர்னியா ரிவர்சைடு ஸ்ரீ லட்சுமி நாராயண் மந்திர் ஷ்ராவன் மாத ...

அரிசோனா தமிழ்ப் பள்ளிகள்

அரிசோனா தமிழ்ப் பள்ளிகள்...

அரிசோனா தமிழ்ச் சங்க நிர்வாகிகள் (2021)

அரிசோனா தமிழ்ச் சங்க நிர்வாகிகள் (2021)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us