வாழ்வியல் இலக்கியப் பொழில் நடத்திய கோடைத்தமிழ்உலா என்னும் இலக்கிய இன்பஉலா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

வாழ்வியல் இலக்கியப் பொழில் நடத்திய கோடைத்தமிழ்உலா என்னும் இலக்கிய இன்பஉலா

ஜூன் 12,2021 

Comments

 'வாழ்வியல் இலக்கியப் பொழில்' என்ற தமிழ் அமைப்பின் சிறப்பு நிகழ்ச்சி சூம் (Zoom) மெய்நிகர் கூட்டமாககடந்தஞாயிற்றுக்கிழமை(06-06-2021) அன்று மாலை 6.00 மணிக்கு 'கோடைத்தமிழ்உலா'விழாநடைபெற்றது.மாலைப்பொழுதில் இலக்கியப் பொழிலில் இளைப்பாற, இலக்கியதில்உலாசெல்ல வந்தோர் யாவரையும் வரவேற்று மகிழ்ந்தார் செயலவை உறுப்பினர் முனைவர் தேன்மொழியாள். விழாவின் நோக்கவுரையையும் இணைத்தே வழங்கினார்.

சிங்கப்பூர் தேசியக் கல்விக்கழகத்தின், ஆசிய மொழிகள் மற்றும் பண்பாடுகள் (தமிழ்) பிரிவின் துணைத்தலைவர் டாக்டர் சீதா லட்சுமி அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுச் சிறப்புரை வழங்கினார். தொடர்ந்து வந்த அமைப்பின் தலைவர் பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி, வாழ்த்துரைவழங்கினார். தம்முடையஉரையில்செந்நெல்மற்றும் ‘தீம்பால்பொங்கல்’ ஆகியவை இலக்கியத்தில் எவ்வாறுவருகிறதுஎன்பதைவிவரித்தார். 

தமிழ் முனைவர்கள் பதின்மர் ஐவகை நிலங்களின் இலக்கண மற்றும் இலக்கியச் சுவையை வழங்கியவாறு, தமிழ்ச் சுவைஞர்களை அழைத்துச் செல்ல வந்தஅனைத்து முனைவர்களையும் முறையாக அறிமுகம் செய்துவைத்தார் திருமதி சித்ரா ஜெயராமன் ஆசிரியை. சங்க இலக்கியப் பாடல்களும் உரைகளும் அடங்கிய இந்த நிகழ்ச்சியில், முதல் சுற்றில் முனைவர் ரகமத் பீபி, முனைவர் ரேவதி, முனைவர் நிர்மலா கிருஷ்ணமூர்த்தி, முனைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் முனைவர் தமிழரசி ஆகியோர் முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை என ஐவகை நிலங்களின் இலக்கண மற்றும் இலக்கியச் சுவையை வழங்குகியவாறுஉரைகள் வழங்கினர். 

இரண்டாம் சுற்றில் முனைவர் கி.துர்கா தேவி, முனைவர் அமிர்தகடேஸ்வரர், முனைவர் இலக்கியத்தோழன் கலியமூர்த்தி, முனைவர் சத்தியபாமா முத்தமிழ்ச்செல்வன் மற்றும் முனைவர் மு.ஜோதிலட்சுமி ஆகியோரும் அதே வரிசையில் இலக்கியச் சுவையை வழங்கியவாறு உரைகள் வழங்கினர்.

உலாவின் நிறைவில், கருத்துத்துரைத்தல் அங்கத்தில் காரைக்குடியைச் சார்ந்ததமிழ்த் தம்பதியினர் புலவர் இராம.வள்ளியப்பன்-தமயந்தி, சிங்கப்பூரைச் சார்ந்த சீர்காழி செல்வராஜூ மற்றும் எ.வெங்கடாசலபதி, விழுப்புரத்தைச் சார்ந்த முனைவர் தி.க.நாகராஜன் மற்றும் சென்னையச் சார்ந்த முனைவர் பன்னிருகைவடிவேலன் பேராசிரியர் ஆகியோர் உலாவில் மகிழ்ந்தவற்றை பகிர்ந்துகொண்டனர்.

நன்றியுரை வழங்கிய கவிஞர் காயத்ரி மறவாமல் யாவரையும் மனதார நினைவுகூர்ந்து நன்றியுரைத்தார். தொடக்கம் முதல் இடையிடையே குறிப்புகள், வழங்கிபல்வேறு வகையில் அழகுற நிகழ்ச்சியை நெறிப்படுத்தி சென்றனர் காயத்ரி மற்றும் சித்ரா ஜெயராமன் ஆசிரியை. 

உற்சாகமாகஅமைந்த “கோடைத்தமிழ்உலா”நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளைச் சார்ந்த தமிழ்ச் சுவைஞர்கள் கலந்துகொண்டு மகிழ்ந்தனர். முடிவுக்கு வர, இனிமையாக தமிழ்க் குடும்பங்கங்கள் பல, கலந்துகொண்ட நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

பொழில் அகம் (Pozhil TV) என்ற வலையொளி (YouTube) வழி நிகழ்ச்சியின்காணொளியைக்காணஇணைப்புகீழே:


https://youtu.be/8INK1ct-PnU

- நமது செய்தியாளர் வெ.புரு ேஷாத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜூலை 31, துபாயில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

ஜூலை 31, துபாயில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி...

அரிசோனா தமிழ்ப் பள்ளிகள்

அரிசோனா தமிழ்ப் பள்ளிகள்...

அரிசோனா தமிழ்ச் சங்க நிர்வாகிகள் (2021)

அரிசோனா தமிழ்ச் சங்க நிர்வாகிகள் (2021)...

31 ஆம் தேதி லண்டனில் தமிழ் மெய்நிகர் அருங்காட்சியகம் இயங்கலைத் திறப்பு

31 ஆம் தேதி லண்டனில் தமிழ் மெய்நிகர் அருங்காட்சியகம் இயங்கலைத் திறப்பு...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us