'வாழ்வியல்இலக்கியப்பொழில்' அமைப்பின் 44 ஆவதுமாதாந்திரநிகழ்ச்சி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

'வாழ்வியல்இலக்கியப்பொழில்' அமைப்பின் 44 ஆவதுமாதாந்திரநிகழ்ச்சி

ஜூன் 18,2021 

Comments

 'வாழ்வியல்இலக்கியப்பொழில்' அமைப்பின் 44 ஆவதுமாதாந்திரநிகழ்ச்சி 12-06-2021 (சனிக்கிழமை) அன்றுமாலை 6.00 மணிக்கு ZOOM வழியாகநடைபெற்றது.‘வாழ்கநிரந்தரம்’ என்றதமிழ்வணக்கப்பாடலோடுவரவேற்புதமிழன்னைக்கு. ‘ஸ்ரீமன்நாராயண’ என்ற பக்தி பாடலோடு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் ஜெயப்பிரகாசம் ஜோஷித். மாலைப்பொழுதில் இலக்கியப்பொழிலில் இளைப்பாற இணையம்வழி இணைந்தோர் யாவரையும் வரவேற்று மகிழ்ந்தார் முனைவர் தேன்மொழியாள். 

தொடர்ந்து வாழ்வியல் இலக்கியப்பொழிலின் 'பொழில்' வாழ்த்துப்பாடல்இசைக்கப்பட்டது. சிறுவர்கள் பங்கேற்கும் அங்கத்தில், பாரதியாரின் ஓடிவிளையாடுபாப்பா -என்கிற பாடலுக்கு அருமையாக பரதநாட்டியம் ஆடி கண்களை குளிரச்செய்தார் கண்மணி. அவரை தொடர்ந்து நன்னெறி கதை ஒன்றை வழங்கினார் கனிஷ்கா. அடுத்து வந்த ஜோஷித் ‘திருக்குறள் உணர்த்தும் ‘சிங்கமும்கமுதையும்’ என்ற நீதிக்கதை ஒன்றை வழங்கினார். 

அடுத்து வந்த சுபநிதி வீரமங்கை வேலுநாச்சியாரை போன்று வேடமணிந்து அவரைபற்றி சில தகவல்களை சிறப்பாக வழங்கினார். தொடர்ந்து வந்த ஜீவஜோதிகா தொல்காப்பியம், மொழிமரபு பிரிவில் வந்த நூற்பாக்களை அழகாக பாடி சிறப்பாக எடுத்துரைத்தார். தொடர்ந்து வந்த அபூர்வா திருக்குறள் சிலவற்றை அழகாக கூறினார். அவரை தொடர்ந்து 'குட்டிகதை' ஒன்றை அருமையாக கூறினார்ஆதிரா. 

சிறுவர் அங்கத்தினைத் தொடர்ந்து வந்த அமைப்பின் தலைவர் பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி “கோடி ” என்ற தலைப்பில் அறிமுகவுரை வழங்கினார். சங்க இலக்கியங்களில் 'கோடி' என்கிற வார்த்தையின் பயன்பாடு பற்றி குறிப்பிட்டு தெளிவாக விளக்கிபேசினார்.அடுத்து புதுக்கனவு அங்கத்தில் 'அறிவியல்வினாவிடை ' போட்டிக்கான கேள்விகள் வெளியிடப்பட்டு, குறைந்தபட்சம் 50% சரியான விடையளித்தவர்களுக்கு மின்-சான்றிதழ் வழங்கப்பட்டது.

தொடர்ந்து வந்த, முனைவர் உஷாசுப்புசாமிஅவர்கள் ‘சிறுபாணாற்றுப்படை – ஓர்அறிமுகம்’ என்ற தலைப்பில் சிற்றுரையாற்றினார். பல்வேறு இலக்கியக் காட்சிகளை அழகுற தம்முடைய உரையில் வெளிப்படுத்தினார் முனைவர். அவரை தொடர்ந்து, திருநெல்வேலி, அம்பாசமுத்திரதிலிருந்து கலந்து கொண்ட தமிழ்ச்செம்மல் விருதாளர் அம்பை பாலசரஸ்வதி 'மதுரை மீனாட்சிப்பிள்ளைத் தமிழ்“ என்ற தலைப்பில் சீரிய கருத்துக்களுடன் சிறப்புரை வழங்கினார். 

 தொடர்ந்து வந்த கவிஞர் சாவித்ரி சித்தமருத்துவ குறிப்புகளை சிறப்பாக வழங்கினார்.கருத்து கேட்பு அங்கத்தில் ,சிங்கப்பூர் திருமதிநாகம்மாள் வாழ்வியல் இலக்கியப்பொழில் நிகழ்ச்சியின் சிறப்பு மற்றும் பயன்கள் பற்றி பாராட்டி பேசினார். கவிஞர் வெங்கடாசலம் நிகழ்ச்சியை பற்றி வாழ்த்துக் கவிதை ஒன்றை வழங்கினார்.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார் உஷாகிருஷ்ணமூர்த்தி. 

நிகழ்ச்சியின் காணொளியை முகநூல் வழியாக நேரலையாகவும் ஒளிபரப்பி வந்தார் ஆசிரியை திருமதிமஹ்ஜபீன் மற்றும் பொறியாளர் குமரேசன் .இல்லத்தில் இருந்தபடி நிகழ்ச்சியின் தொடக்கம் முதலே, திருமதி உஷாகிருஷ்ணமூர்த்தி மற்றும் திருமதி தேன்மொழியாள் அழகுற நிகழ்ச்சியை நெறிப்படுத்த சிறப்பான நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

முகநூலில்கண்டுகளிக்க:

https://www.facebook.com/100023627371055/videos/949430419187862/

அமைப்பின்இணையப்பக்கம்: www.ilakkiyapozhil.com
- நமது செய்தியாளர் வெ.புரு ேஷாத்தமன்



Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜூலை 31, துபாயில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

ஜூலை 31, துபாயில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி...

அரிசோனா தமிழ்ப் பள்ளிகள்

அரிசோனா தமிழ்ப் பள்ளிகள்...

அரிசோனா தமிழ்ச் சங்க நிர்வாகிகள் (2021)

அரிசோனா தமிழ்ச் சங்க நிர்வாகிகள் (2021)...

31 ஆம் தேதி லண்டனில் தமிழ் மெய்நிகர் அருங்காட்சியகம் இயங்கலைத் திறப்பு

31 ஆம் தேதி லண்டனில் தமிழ் மெய்நிகர் அருங்காட்சியகம் இயங்கலைத் திறப்பு...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us