அல் அய்ன் இந் தியன் சோஷியல் செண்டர் தலைவருக்கு பாராட்டு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அல் அய்ன் இந் தியன் சோஷியல் செண்டர் தலைவருக்கு பாராட்டு

ஜூன் 19,2021 

Comments

அல் அய்ன் : அல் அய்ன் இந்தியன் சோஷியல் செண்டரின் தலைருக்கு அபுதாபி அய்மான் சங்க நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர். அல் அய்ன் இந்தியன் சோஷியல் செண்டரின் தலைவராக கீழக்கரை முபாரக் முஸ்தபா இருந்து வருகிறார். இவர் இந்த செண்டருக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த முதலாமவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செண்டரின் மூலமாக இந்திய துணை தூதரகத்துடன் இந்திய சமூகத்தினருக்கு தேவையான பல்வேறு பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்.

குறிப்பாக கொரோனா பாதிப்பு கால கட்டத்தில் வருவாய் இழந்தவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், எதிர்பாராத வகையில் மரணமடைபவர்களின் உடல்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பது, தொழிலாளர்களது பிரச்சனைகளை தீர்க்க உதவுவது உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறார்.

மேலும் இந்திய தூதரகத்தின் மூலம் தூதரக சேவைகள் ஒவ்வொரு மாதமும் அல் அய்ன் நகரில் நடப்பதற்கு தேவையான பணிகளை செய்து வருகிறார்.

இத்தகைய சிறப்பான சேவைகளை செய்து வரும் தமிழரை அபுதாபி அய்மான் சங்க நிர்வாகிகள் சந்தித்து பொன்னாடை அணிவித்து பாராட்டினர்.

இச்சந்திப்பின் போது, அய்மான் பைத்துல்மால் செயலாளர் நிஜாம் மைதீன், நிர்வாக செயலாளர் ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர் மற்றும் துணைப் பொருளாளர் பசுபதி கோவில் சாதிக் பாட்சா ஆகியோர் உடன் இருந்தனர்.

அப்போது பேசிய முபாரக் முஸ்தபா, அல் அய்ன் இந்தியன் சோசியல் சென்டரில் நடக்கும் அனைத்து செயல்பாடுகளையும் விரிவாக விளக்கினார்.மேலும் அய்மான் சங்கம் ஆற்றி வரும் எண்ணற்ற சமுதாயப் பணிகளை பாராட்டினார். இச்சந்திப்பு சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்றது.

வரும் காலங்களில், இணைந்து பணியாற்றுவது என இரு தரப்பிலும் முடிவு செய்யப்பட்டது.

- நமது செய்தியாளர் காஹிலா



Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜூலை 25 ல் சத்யநாராயண் கதை - குரு பூர்ணிமா

ஜூலை 25 ல் சத்யநாராயண் கதை - குரு பூர்ணிமா...

23 ல் கலிபோர்னியா ரிவர்சைடு ஸ்ரீ லட்சுமி நாராயண் மந்திர் ஷ்ராவன் மாத நிகழ்வு

23 ல் கலிபோர்னியா ரிவர்சைடு ஸ்ரீ லட்சுமி நாராயண் மந்திர் ஷ்ராவன் மாத ...

அரிசோனா தமிழ்ப் பள்ளிகள்

அரிசோனா தமிழ்ப் பள்ளிகள்...

அரிசோனா தமிழ்ச் சங்க நிர்வாகிகள் (2021)

அரிசோனா தமிழ்ச் சங்க நிர்வாகிகள் (2021)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us