ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட பிரதமர் தேசிய ஸ்பெல்லிங் பீ போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 11 வயது சிறுமி தீக்ஷிதா கார்த்திக் தேசிய சாம்பியனாக வெற்றி பெற்றுள்ளார். 'கடினமான வார்த்தைகளுக்கு ஸ்பெல்லிங் அறிவதில் இருந்த ஆர்வமும் கடும் உழைப்புமே இந்த வெற்றிக்கு காரணம்' என்று தீக்ஷிதா கூறினார்.
21 ஆயிரம் பேர் போட்டி
இந்த போட்டியில் ஆஸ்திரேலியா முழுவதிலுமிருந்து 490 பள்ளிளைச் சேர்ந்த சுமார் 21 ஆயிரம் 5 மற்றும் 6 வகுப்பு மாணவ, மாணவியருடன் போட்டியிட்டு இந்த வெற்றியைப் பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் இந்த விருதை தீக்ஷிதா கார்த்திக்கு வழங்க இருக்கிறார்.
மெல்போர்னில் படித்து வரும் தீக்ஷிதாவுக்கு ஸ்பெல்லிங் அறிவதென்பது விருப்பமான பாடமாக இருந்து வருகிறது. இவருக்கு 2 வயது இருக்குமபோதே இவருடைய பெற்றோர் ஆஸ்திரேலியாவில் குடியேறினர். அப்போதிருந்தே ஆங்கிலத்தில் ஆர்வம் காட்டி வந்த தீக்ஷிதா, ஸ்பெல்லிங் அறிவதில் அதிலும் குறிப்பதாக கடினமான வார்த்தைகளுக்கான ஸ்பெல்லிங் அறிவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார்.
ஆர்வமும் உழைப்பும்
“ ஸ்பெல்லிங் அறிந்து கொள்வதை நான் மிகவும் விருப்பத்துடன் செய்தேன்; அது என்னுடைய ஆர்வமாக இருந்தது. என்னுடன் படித்தவர்கள் ஸ்பெல்லிங் தேர்வு என்றாலே முணகியபோது அதை நான் ஆர்வத்துடன் எதிர்கொண்டேன்” என்று தீக்ஷிதா கூறினார், மூன்று பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் ஒன்றில் வெறறி பெற்றுள்ள தீக்ஷிதா, கான்பெர்ராவில் பிரதமரிடம் இதற்கான விருது சான்றிதழைப் பெற இருக்கிறார். மேலும் 250 டாலர் மதிப்பிலான புத்தகங்கள், ஒரு ஐபேடு ஆகியவையும் இவருக்குப் பரிசாக கிடைக்க உள்ளது.
இந்த போட்டி மார்ச் 15 முதல் 27 வரை மூன்று சுற்றுகளாக பள்ளி, மாகாணம் மற்றும் தேசிய மட்டங்களில் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டுகளைப் போல் அல்லாமல் இந்த ஆண்டு போட்டி ஆன்லைனில் நடத்தப்பட்டது. ஆசிரியர்களின் மேற்பார்வையில் 30 கடினமான வார்த்தைகளுக்கான ஸ்பெல்லிங்கை விரைவாகவும் சரியாகவும் எழுதுமாறு போட்டியில் பங்க பெற்றவர்கள் கேட்டுக கொள்ளப்பட்டனர். குறுகிய நேரத்தில் சரியான ஸ்பெல்லிங் டைப் செய்வதே இந்த போட்டியின் முக்கிய அம்சம்.
ஒரு நிமிடத்தில் 30 வாரத்தைகள்
தீக்ஷிதா ஒரு நிமிடத்தில் 30 வார்த்தைகளை சரியாக டைப் செய்து வெற்றி பெற்றார். இந்த வெற்றி பற்றி அவர கூறுகையில், “ நான் இதற்காக கடுயைான பயிற்சி எடுத்துக கொண்டேன். இதற்ான புத்தகங்களையும் படித்தேன். எவ்வுடைய இந்த திறமையை கண்டுபிடித்து இந்த போட்டியில் பங்கேற்க என்னை ஊக்குவித்த பெர்விக்கில் உள்ள என்னுடைய ஹெய்லிபரி பள்ளிக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்” என்றார்.
தீக்ஷிதாவின் தந்தை கார்த்திக் கணேசனும் தாயும் இவருக்கு மிவும் அனுசரணையாக இருந்து ஊக்குவித்துள்ளனர். தேவையான புத்தகங்களை வாங்கி கொடுத்துள்ளனர்.
மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...
மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...
அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.